சுடர் - 1

3.3K 78 4
                                    

"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.

அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி…"

கந்தர் சஷ்டி கவசம் வானொலியில் பாடிக் கொண்டு இருக்க, அறுபடை வீடு கொண்ட முருக பெருமானை மனதில் நிறுத்தி மனமுருகி அவரை வேண்டிக் கொண்டார் கற்பகம்.

"இளமதி!" அவர் அழைக்க, துள்ளிக்குதித்து அவளிடம் ஓடி வந்தாள் அவளின் செல்ல மகள் இளமதி.

"சாமி கும்பிட்டுக்கோ டா செல்லம்" கற்பகம் கூற, இளமதி அதை அழகாக தலை அசைத்து ஏற்றுக் கொண்டாள்.

இன்று இளமதியின் நான்காவது பிறந்தநாள். கற்பகம், கார்த்திகேயன் தம்பதியருக்கு, திருமணம் முடிந்து பத்து வருடங்கள் கழித்தே இளமதி  வரமாக கிடைத்திருந்தாள். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கும் பெற்றோர் அவளுக்கு கிடைத்திருந்தனர்‌.

"அம்மா இன்னிக்கு நாம எங்கே போக போறோம்?" அவள் ஆர்வமாக கேட்க, "இன்னிக்கு என் செல்ல பொண்ணுக்கு பிறந்தநாள். அதை கொண்டாட போறோம்" அவள் கன்னத்தை வருடி கற்பகம் பதில் அளிக்க, அவள் அழகாக புன்னகைத்தாள்.

"அப்பா எப்போ வருவாரு?" அவள் கேட்டுக் கொண்டு இருந்த சமயம், கார்த்திகேயன் வீட்டிற்குள் நுழைந்தார். "அப்பா!" என்று ஆசையாக கூறி அவரிடம் சென்று அவரை அணைத்துக் கொண்டாள் இளமதி.

"அப்பா எங்க போயிருந்தீங்க?" அவள் கேட்க, "கோவிலுக்கு போயிருந்தேன் டா செல்லம். இன்னிக்கு என் பொண்ணு பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்களமா இருக்கணும்னு நானே அங்க இருந்து எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டு வந்திருக்கேன் டா குட்டி. இப்போ நாம மூணு பேரும் அங்க போகப் போறோம்" அவர் ஆர்வமாக கூற, இளமதி உற்சாகமாக தலை அசைத்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

கற்பகம் இளமதிக்காக தானே தைத்த பட்டு பாவாடையை அவளுக்கு அணிவித்து, அவள் தந்தை அவளுக்காக வாங்கி வந்த ஆபரணங்களையும் அணிவித்தாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now