சுடர் - 25

1.8K 71 6
                                    

"உன்னுடைய வாழ்க்கையை பற்றி மாமா என்கிட்ட நிறையவே சொல்லிருக்காரு மதி. நிறைய விஷயங்களை நானே கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அதனால் வந்த பரிதாபத்தில் தான் உன்கிட்ட நல்லா பழகுறேனு தயவு செய்து நினைக்க வேண்டாம்.

நான் அனுபவிச்ச கஷ்டத்தை என் எதிரியும் அனுபவிக்க கூடாதுனு தான் நான் எப்பொழுதும் நினைப்பது. ஆனா நீ எல்லா பிரச்சினைகளையும் இவ்வளவு எளிமையா கையாண்ட விதம் தான் எனக்கு உன் மேல பெரிய மரியாதையை உருவாக்கிடுச்சு‌" என்றான் உண்மையான உணர்வுகளுடன்.

அவள் புன்னகைத்தாள். "உன்ன மாதிரி நடந்ததை எதிர்த்து போராடி நான் வேண்டியதை அடைந்திருக்கணும். ஆனா நான் அப்படி எதுவும் செய்யாமல் இவ்வளவு நாள் எனக்கு நானே துன்பத்தை தான் வரவழைத்து கொண்டேன்.

என்ன பெத்தவர் தான் நான் வெறுக்கும் முதல் நபர். ஆனா அதைவிட அதிகமா ஒருத்தர் மேல கொலைவெறி இருக்கு" என்றான் கண்கள் சிவக்க.

இளமதிக்கு எதுவும் விளங்கவில்லை. அவனே தொடரட்டும், இன்று அவன் மனதில் இருக்கும் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் அவனை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

"சொல்ல போனால், அந்த ஆள் தான் என் அப்பாவுக்கு உந்துகோலாக இருந்த அவர் செய்த எல்லா குற்றத்திற்கும் துணை நின்றவன்" என்றான் குரலில் மிகுந்த கோபத்துடன்.

"கோபம் வேண்டாம்! யார் அவர்? இப்போ எங்க இருக்காரு?" அவள் கேட்க, "செத்துட்டான்!" என்றான் ஒற்றை வார்த்தையில். அதை கேட்டவள் அதிர்ந்தாள். உயிரோடு இல்லாத ஒருவர் மீது இத்தனை ஆத்திரமா? என்று தோன்றியது அவளுக்கு.

"இப்போ உயிரோடு இருந்திருந்தா, எனக்கு இருந்த ஆத்திரத்தில் நானே அவனை கொன்றிருப்பேன். நல்ல வேளையா அந்த பாவ காரியம் என் கையால நடக்க கூடாதுனு தான் அவரே அதை செஞ்சுட்டாரு" என்றான் அவன்.

அதை கேட்டவளுக்கு அவன் மீது கோபம் வந்தது. என்னதான் கெடுதல் செய்தவனாக இருந்தாலும் இவ்வாறா ஒருவர் இறந்ததை நினைத்து சந்தோஷப் படுவது! அவருக்கும் மனைவி குழந்தைகள் இருந்திருந்தால், அவர்களின் கதி என்ன ஆகும் என்று கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பேசுகிறானே என்று எண்ணினாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now