சுடர் - 26

1.7K 71 9
                                    

பரிதி கொடுத்த பரிசை திறந்து பார்த்தவள் கண்கள் பளிச்சிட்டன. அவள் வடிவமைத்திருந்த ஒரு புடவை தான் அது.

அழகாக அதன் முந்தானையில் மயில் கழுத்து நீண்டு தோகை விரிப்பதை போல் அவள் வடிவமைத்திருந்தாள்.

மயில் கழுத்து நிறத்திலேயே புடவையும் அதன் தோகை நிறத்தில் முந்தானையும் பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அவள் நிறத்திற்கு அந்த புடவை எடுப்பாகவும் இருந்தது.

"தேங்க்ஸ்!" என்றாள் புன்னகையுடன்.

"இது இன்னும் லான்ச் பண்ணல, பொங்கலுக்கு தான் இந்த டிசைன் லான்ச் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்காங்க. அதான் அதுக்கு முன்னாடியே உனக்கு அதை பரிசா கொடுக்கணும்னு நினைச்சேன்" என்றான் மகிழ்வாக, அவளும் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டாள்.

அங்கு இன்னொரு பார்சல் இருக்க, அவளுக்கு குழப்பமாக இருந்தது. "இது என்ன?" என்று அவள் கேட்க, "இது தான் உனக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு. அந்த புடவையை பார்த்ததும் அதை உனக்கு கொடுக்கணும்னு தோனுச்சு. அதுக்காக கொடுத்தது, இது நான் ரெடி பண்ணின பரிசு" என்றான் புன்னகையுடன்.

அவளுக்கு ஆர்வமாக இருக்க, அதை பிரிக்க தொடங்கினாள். அந்த பரிசை பார்த்ததும் அவளுள் மகிழ்ச்சி பெருகியது. விழிகள் விரிய ஆச்சரியத்துடன் அதை பார்த்தாள்.

"இது..?" அவள் என்னவோ சொல்ல நினைக்க, அவன் இடைமறித்து பேசினான்.

"இது நீ வரைந்த டிராயிங் தான்" என்றான் அவள் மனதை படித்தவன் போல. அவளுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் வரைந்த ஓவியம் தான். அவளுக்கு மிகவும் பிடித்த ஓவியமும் கூட, அவன் அந்த ஓவியத்தை அழகாக ஃப்ரேம் செய்து கொடுத்திருந்தான். அதையெல்லாம் விட அவள் மனதை கவர்ந்த ஒன்று, அந்த ஓவியத்தில் அவன் செய்திருந்த ஒரு மாற்றம் தான்.

இளமதி வரையும் அனைத்து படங்களும் அவள் மனதின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தான் இருக்கும். அதை பார்ப்பவர்கள் அதன் உண்மை பொருளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now