சுடர் - 27

1.8K 66 18
                                    

அடுத்து வந்த சில நாட்களில் அவன் உடல் நிலை நன்றாகவே தேறி கொண்டு இருந்தது. இளமதி அவன் அருகிலேயே இருந்து அவனை கவனித்துக் கொண்டாள்.

"மதி! எப்போ டாக்டர் வருவாரு?" ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவள் கைகளை பிடித்து கொண்டு அவன் கேட்க, "இப்போ தானே சொன்னேன், இன்னும் அரைமணி நேரத்தில வந்துருவாரு. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க, இன்னிக்கு நிச்சயமா உங்க கையில இருக்க கட்ட பிரிச்சிடுவாங்க" அவள் கையில் வைத்திருந்த கரண்டியை ஓங்கியவாரே கூறினாள்.

"சரி! சரி! போ மா... போய் அமைதியா சமையல் வேலைகளை பாரு" என்றான் குரலில் பணிவு தெரிய, "ம்ம்!" என்று அவனை முறைத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

காலை மருத்துவர் கட்டு பிரிக்க வருவதாக கூறியதில் இருந்து ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வந்து இதே கேள்வியை கேட்டுக் கொண்டு இருந்தால் யாருக்கு தான் கோபம் வராது.

அதுவும் அத்தனை நாளும் அவனை சிறு குழந்தை போல் அவள் கவனித்துக் கொண்ட பொழுதும் அவன் ஏதோ சிறையில் இருந்து விடுதலை கிடைப்பதை போல் நடந்து கொண்டது அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது.

அரைமணி நேரத்தில் மருத்துவர் வந்து சேர்ந்தார். அவர் அவனை பரிசோதனை செய்து விட்டு, கட்டை எடுத்து விட்டார். இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய பிறகு தான் இளமதிக்கு நிம்மதியாக இருந்தது.

மருத்துவர் சென்றதும் அவள் அமைதியாக தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டு பட்டாம்பூச்சிகளை பார்த்து கொண்டு இருந்தாள்.

"ஓய்! உன்ன எங்கெல்லாம் தேடுறது?" என்று கேட்டு கொண்டே வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

"என்ன எதுக்கு தேடணும் அதான் கட்டெல்லாம் அவிழ்த்தாச்சே நீங்க சுதந்திரமா வெளியே போய் என்ஜாய் பண்ண வேண்டியது தானே?" என்றாள் முகத்தை திருப்பி கொண்டு.

"அடடா! என்ன ஒரு புத்திசாலித்தனம்? லூசு! நான் உன்ன வெளியே கூட்டிட்டு போக தான் இவ்வளவு நாளும் காத்துக்கிட்டு இருந்தேன். இந்த உற்சாகம் எல்லாம் அதை நினைச்சு தான்" என்றான் உற்சாகமாக.

என் வாழ்வின் சுடரொளியே!Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα