சுடர் - 40

1.5K 72 14
                                    

"மதி! நான் இங்க ரீச் ஆயிட்டேன். நீ எந்த கவலையும் இல்லாம தூங்கு, சீக்கிரம் வந்துடுவேன். அது வரைக்கும் நீ அங்கேயே இரு!" பரிதி கூறியதை தலை அசைத்தவாறே கேட்டு கொண்டு இருந்தாள்.

"சரி நான் போன் வச்சுடுறேன், நீ தூங்கு" என்று கூறி கைபேசியை வைத்து விட்டான். அவளுக்கு கவலையாக இருந்தது. அவனை பார்க்க போகும் நாளை எண்ணி காத்திருந்தாள். அவனை பிரிந்து இருப்பது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

மறுநாள், அவள் சித்தப்பாவுடன் அவர்கள் தோட்டத்திற்கு சென்று, அங்கிருந்த பயிர்கள், பழ மரங்களுக்கு இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் அதன் தரத்தை மேம்படுத்த சில குறிப்புகளையும் அங்கிருந்த அனைவருக்கும் எடுத்து கூறினாள். அவர்களும் அதை ஏற்று அதன்படி செய்தார்கள்.

காலையில் தோட்டத்திற்கு சென்றவள் மாலை தான் வீடு திரும்பினாள். வந்ததும் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்ற, வேகமாக சென்று அவள் கைபேசியை எடுத்து அவனை அழைத்தாள்.

அவன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வர, அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. இத்தனை நாளில் ஒருமுறை கூட அவ்வாறு ஆனது இல்லை. இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தாள் எந்த பயனும் இல்லை எனவே இரவு அழைத்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு மகேஷ்வரியை காண சென்றாள்.

இரவு உணவு சாப்பிட்டு விட்டு அவள் அறைக்கு வந்து பார்த்த போது நேரம் பத்து. ஆனால் அப்பொழுதும் அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

அவளே மீண்டும் அவனை அழைத்தாள். ஆனால் இந்த முறையும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. முதல் முறையாக அவள் மனதில் அச்சம் தோன்றியது.

நேற்று இரவு அதே இடத்தில் இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஒருநாளில் அவன் அவளை விட்டு வெகு தொலைவு சென்று விட்டது போன்ற உணர்வு தோன்றியதும் அவள் கண்கள் தானாக கலங்கியது.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now