சுடர் - 10

1.9K 72 5
                                    

"அம்மா, அப்பா சொல்லுறத கேட்டு அந்த ரிசப்ஷன் போகாம இருந்துடாதீங்க. நாம கண்டிப்பா அங்க போகணும்" ராகவி கூறியதை கேட்டு ராசாத்தி அவளை முறைத்தாள்.

"இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடான்னா அவ கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்க?

அவளுக்கு கணவனா வந்தவன் முதல் நாளே என்ன அவமானப் படுத்தியது உனக்கு மறந்து போயிடுச்சா?" அதே கோபத்துடன் அவளை கேட்டாள்.

"ஐயோ இல்ல மா! நான் சொல்லுறத பொறுமையா கேளு. நீ அவ உறவே வேண்டாம்னு அவளை விட்டு விலகிட்டா அப்புறம் இந்த சொத்த அடையும் எண்ணத்தையும் நீ கைவிட்டுற வேண்டியது தான்" அவள் கூறியதை கேட்டு குழப்பமாக அவள் முகத்தை பார்த்தாள் ராசாத்தி.

"சொத்துக்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுறதும் எந்த விதத்தில ஒத்துப்போகும்?" அவள் கேட்க,

"இப்போ அவளுக்கு உறவுனு சொல்லிக்க நாம மட்டும் தான் இருக்கோம். நாம தான் அவள இவ்வளவு வருஷம் பார்த்துகிட்டு இருந்தோம்னு எல்லாருக்கும் தெரியும், பரிதி குடும்பத்துக்கு இந்த சொத்து ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

அதனால நாம இளமதி கிட்ட கொஞ்சம் இயல்பா பழகினா தான் அவளே இந்த சொத்துக்களை நமக்கு கொடுக்க சம்மதிப்பா" ராகவி கூறியதை ராசாத்தி அமைதியாக கவனித்தாள் அவளுக்கும் ராகவி சொல்வது சரி என்றே தோன்றியது.

"நீ சொல்வதும் சரிதான். நமக்கு இந்த சொத்து ரொம்ப முக்கியம். அப்போ தான் உன் கல்யாணத்தை சிறப்பா செஞ்சு முடிக்க முடியும்" ராசாத்தி அதை ஒப்புக் கொண்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை எல்லாம் மணிவாசகம் ஒரு மறைவான இடத்தில் நின்று கேட்டு கொண்டு தான் இருந்தார். இவர்கள் எதாவது சதி திட்டம் தீட்டி வரவேற்பு நிகழ்ச்சியை கெடுக்க நினைப்பார்கள் என்று எண்ணி அவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்டார்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now