சுடர் - 34

1.5K 74 14
                                    

"பரி! எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள் அந்த பெண். அவன் எதுவும் பேசவில்லை, அவன் முகம் இறுகி இருந்ததை இளமதி கவனித்தாள். "ரொம்ப நல்லா இருக்கேன். பை தி வே, மீட் மை ஒய்ஃப் இளமதி" என்று கூறி அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டு கூறினான்.

இளமதி எதுவும் புரியாமல் விழித்தாள். அந்த பெண்ணின் முகம் இருண்டது, இருப்பினும் அதை சமாளித்து கொண்டு இளமதியை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள்.

"ஹாய்! நான் நிவேதிதா" என்றாள், இளமதி புன்னகையுடன் அவளுக்கு பதில் அளித்தாள்.

"சரி எங்களுக்கு நேரம் இல்ல, ஷாப்பிங் முடிச்சுட்டு நாங்க இன்னும் சில இடங்களுக்கு போக வேண்டியது இருக்கு. நாங்க கிளம்புறோம்" என்றான் பரிதி, இளமதி அவனை சங்கட்டமாக பார்த்தாள், இப்படியா ஒருவரிடம் முகத்தில் அறைந்தது போல் பேசுவது என்று தோன்றியது அவளுக்கு.

அந்த பெண் சிறு தலை அசைவுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

"ஏன் அந்த பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக் கிட்டீங்க? பாவம் முகம் எவ்வளவு வாடி போயிருச்சு பாருங்க" என்றாள் சோகமாக.

"அவ யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி எல்லாம் பேச மாட்டே!" என்று கூறி அவளை வேறு ஒரு கடைக்குள் அழைத்து சென்றான்.

பரிதி அவளை அங்கிருந்த அனைத்து கடைகளுக்கும் சென்று அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுத்து இருவரும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆனது.

"குட் நைட்!" என்று புன்னகையுடன் கூறி அவள் அறைக்கு செல்ல இருந்தவளை கைப்பிடித்து தடுத்தான். அவள் குழப்பமாக அவன் முகத்தை பார்க்க, "இனி நீ இந்த அறையில் தங்க வேண்டாம் மதி. நீ நம்ம அறையிலேயே இரு" என்று கூறினான் குற்ற உணர்வுடன்.

"இப்போ உங்க ரூமுக்கு வந்து அங்கேயே இருக்க சொல்லுவீங்க நாளைக்கு எதாவது சண்டை வந்தா இது என் ரூம் வெளியே போனு சொல்லிருவீங்க.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now