29

924 30 14
                                    

Final episode :

நான்கு வருடம் கழிந்தது....

அந்த அழகான செம்மண் பூமியின் தக்காளி செடிகளிலிருந்து  பறித்துக்கொண்டிருந்தாள் நம் குட்டி தேவதை குழலி. அந்த பிஞ்சு கைகள் தக்காளியை பறித்தவாறு எடுத்து ஒரு கூடைக்குள் போட்டுக்கொண்டு இருந்தது. அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

"ஹே...தமிழு இங்கே வாயேன் இந்த தக்காளி பாரேன் எப்படி இருக்குனு" என்று அந்த மூன்று வயது தேவதை தன் தாய் தமிழ்ச்செல்வியை அவ்வாறு அழைக்க ,அவள் சிரித்துக்கொண்டே அந்த தேவதை இருக்கும் இடத்திற்கு சென்று வாரி அணைத்து கொண்டு.
"செல்லம் என்ன பண்றீங்க.. இந்த கூடையில் இருக்கும் தக்காளி யாருக்கு" என்று வினவ அந்த மழலையோ
"இது அந்த மாசிலாமணி தாத்தா வீட்டுக்கு ,அங்கே பாவம் அந்த மாசிலாமணி தாத்தா தனியா இருக்காரு வீட்டில் அவருக்கு காய்கறி வாங்கிதரக்கூட ஆளு இல்லையாம்" என்று பரிதாபமாக கூற அந்த குழந்தையின் கரிசன குணத்தை பார்த்து அனைவரும் பிரம்மித்தனர்.

ஆம் மாசிலாமணி தனது சூழ்ச்சமத்தால் நிறைய இழந்து இன்று தனிமரமாய் இருக்கிறார். அன்று தர்மலிங்கம் மற்றும் அமுதனை கேலி செய்தவன் இன்று இவர்கள் பயிர் வைத்து விளைத்த தக்காளியை இலவசமாக வாங்கிக்கொள்ளும் அவல நிலை. சரி அதுபோகட்டும் வாங்கள் தமிழ்ச்செல்வியுடன் பயணிப்போம்.

"நான் தமிழ்ச்செல்வி" அதான் உங்களுக்கே தெரியுமே ! வரண்ட நிலம்போல காட்சியளித்த என்னுடைய வாழ்க்கை எப்படி மாறியது? வாருங்கள் சொல்கிறேன். சற்று அமர்ந்து கண்களை மூடுங்கள்... அன்று என்ன நடந்தது? மருந்தகத்தில் ப்ரெக்னன்ஸி கிட் வாங்கியது யார்? நிச்சயமாக நானில்லை என்னுடைய தங்கை மன்னிக்கவும் என்னுடைய மூத்த மகள் கலையரசி தான்.

ஆம் அவளுக்கு தான் நாட்கள் தள்ளிபோகியிருக்க...ப்ரெக்னன்ஸி கார்டில் பரிசோதனை செய்தபோது நேர்மறை பதில் தான் வந்தது ,மருத்துவரும் பாஸிட்டிவ் என்று தான் சொன்னார்கள். தாய்மை அடைந்து அந்த கனவோடு என்னை சந்திக்க வந்தாள் கலை...

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now