19

363 17 0
                                    


என்ன சொல்வதென்று தெரியாமல் தட்டு தடுமாறி விஷயத்திற்கு வந்தாள் தமிழ்செல்வி.
"என் மச்சினன் உங்க பொண்ணு கூட தான் படிக்கிறாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க இது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஆனால்  நீங்க இதை காரணம் காட்டி படிக்க அனுப்பாமல் இருக்கிறது தவறு . காதலும் படிக்கிற வயசுல தான் வரும் என்ன பண்ணுவாங்க பசங்க மனசு தடுமாறி போற சமயத்துல என்ன முடிவு எடுக்கிறது என்று அவர்களுக்கே தெரியாமல் போயிடுது அதனால வர்ற விளைவுதான் இது நம்ம பெரியவங்க எடுத்து சொன்னா அவங்க எல்லாமே புரிஞ்சுபாங்க அதே சமயம் உண்மையான காதலா இருந்தால் பெரியவங்க நாம்ப அவங்கள ஒன்று சேர்த்து வைக்கலாமே தவறு இல்லையே எதுக்கு நம்ம அவங்ககிட்ட போட்டி போட்டு அவங்க படிப்பையும் கெடுக்கணும்." என்று தமிழ் அடுக்கிக்கொண்டே போக அதை காதில் வாங்கியவர்.

"இதுவே உன் தங்கச்சி இந்த மாதிரி பண்ணி இருந்தா நீ இதே மாதிரி சொல்ல முடியுமா" என்று வெடுக்கென்று அவர் கேட்க...

அதற்கு அவள் சிரித்துக் கொண்டே"எனக்கு அந்த வயசுல தங்கச்சி இருந்திருந்தாலோ இல்லை என் தங்கச்சி கலையரசி, குமரன் வயசுல இருந்திருந்தாலோ நான் தாராளமா குமரனை அவளோடு சேர்த்து வைத்திருப்பேன் ஏன்னா எங்க வீட்டு குமரன் ரொம்ப நல்லவன். இதை நான் சொல்லி நீங்க புரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை நீங்க ஒரு நாள் அவனை நேரில் பார்த்து பேசுநீங்ங்கனா உங்களுக்கே புரியும் அவனுடைய குணம் இப்பகூட நான் காதலை விட்டுக் கொடுக்கிறேன் தான் சொன்னா ஸ்ருதியுடைய படிப்பு வீணாகிவிடக் கூடாது அப்படின்னு தான் அவன் நினைக்கிறானே தவிற மற்றபடி அவனுக்கு உங்க பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கனும் அப்படிங்கிற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது"என்று அவள் சொல்லி முடிக்க..

"காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு... அதனால நீங்க உங்க மச்சினன் க்கு சப்போர்ட் பண்ணி பேசலாம் அதற்காக எல்லாமே நான் நம்பிவிட முடியாது"என்று கூறினார்.
இதைக்கேட்ட தமிழ்ச்செல்வி "ஐயா நீங்கள் என்னோட மச்சினன் நம்பணும்அவசியமில்லை ... ஆனால் உங்கள் சொந்த மகளை நம்பலாம்..ஏன்னா அவள் உங்கள் வளர்ப்பு.. உங்கள் மேல் அவளுக்கு இருக்க மரியாதை காரணமாக தான் அவன் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்ககா... இல்லன்னா என்னைக்கோ தப்பிச்சி போயிருக்கலாம்."என்று அவள் கூறிய அடுத்த நொடி அவர் சிந்திக்கத் துவங்கினார்.தன் தவறை உணர்ந்து விட்டார் போலும்.

காரிகையின் கனவு (Completed Novel)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ