11

408 19 0
                                    

மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது தான் பக்கத்து வீட்டு சரஸ்வதி அக்கா வந்தாள்.
"அட சாப்பிட்டு கொண்டு இருக்கீங்க மன்னிக்கவும் உள்ளே நுழைந்ததற்கு"என்று கூற தமிழின் தாய் அவரை உள்ளே அழைத்து "அட பரவாயில்லை உள்ள வா சரஸு நீயும் ஒருவாய் சாப்பிடு மணக்க மணக்க கறிகுழம்பு வச்சிருக்கேன்" என்று கூறி புன்னகையிக்க சரஸ்வதி இது தான் சரியான வேளை என்பதுபோல் வந்து தமிழின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.

"அக்கா...உங்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமேனு வந்தேன்" என்றிழுக்க அதை காதில் வாங்கியபடி அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க..அவளோ அவர்களை நோக்கி "அது வந்து என் மச்சினர் பொண்டாட்டிக்கு இப்பதான் குழந்தை பிறந்திருக்கு. தொப்புள்கொடி விழுற நேரம். தமிழ் மாதிரி குழந்தை இல்லாதவர்கள் அந்த பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வாழைப்பழத்தில் வைத்து விழுங்கினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று என் வீட்டு ஆளுங்க பேசிக்கிட்டாங்க அதான் உங்கள் கிட்ட சொல்லி பார்க்கலாமேனு வந்தேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் கலையரசி குறுக்கிட்டாள்...

"ஹலோ சரஸக்கா எந்த காலத்துல இருக்கீங்க இன்னுமும் இந்த மூடநம்பிக்கை எல்லாம் நம்பிட்டு இருக்கீங்க? இன்னமும் ஏன் இதையெல்லாம் பின்பற்றி வருகிறீர்கள் என்று எனக்கு சுத்தமாக புரியல"என்று ஆதங்கத்துடன் வினவ..

சரஸ்வதி கை கழுவியபடி "கலை நீ சின்ன பொண்ணு இதெல்லாம் உனக்கு புரியாது. பெரியவங்க நாங்க பேசிக்கிறோம் நீ அமைதியா இரு" என்று கூற..

"அக்கா இங்க பாருங்க நானும் உலகம் அறிந்தவள் தான் எது நியாயம் தர்மம். என்று எங்களுக்கு தெரியும். ஆமாம் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சாப்பிட்டு குழந்தை பிறந்ததை நீங்க கண்கூட பார்த்தீங்க? சரி அதெல்லாம் இருக்கட்டும் அப்போ இந்த மருத்துவம் விஞ்ஞானம் எல்லாம் எதுக்கு?நாமளே இந்த மாதிரி வீட்டு வைத்தியம் வச்சிக்கிட்டு எல்லாம் நோய்களையும் குணப்படுத்தலாமே..சை என்ன உலகம் டா இது? இந்த 21ம் நூற்றாண்டில் கூட இப்படி ஓர் மூடர்கூடம் இருக்கத்தான் செய்றாங்க" என்று தனக்குள் முனவிக்கொண்டே ஆதங்கப்பட்டாள்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now