1

2.2K 35 21
                                    

மெழுகுவர்த்தி போல் உருகிக்கொண்டிருக்கும் அவளது மனதை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அவளுடைய கணவன் பலமுறை தோற்றுப்போனாலும்,இன்று எப்படியாவது அவளது மனதை தேற்றிவிடவேண்டும்,எப்படியேனும் அவள் தன் சோகத்தை மறந்து தன் இயல்பான நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணிய அமுதன் தன் மனைவியை வழுமையாய் கூப்பிடும் செல்ல பெயரையிட்டு அழைத்தான்.
"அம்முலு..."

அந்த அழகான உச்சரிப்பில் சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த அமுதனின் மனைவி தமிழ்ச்செல்வி ஓடிவந்து "என்னங்க கூப்பிட்டிங்களா"என்று கேட்க
"ம்ம்ம் உன்னை தான் கூப்பிட்டேன்,ஒன்னுல இன்னைக்கு சாயந்திரம் சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து வந்துவிடுவேன்,நம்ப இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வருவோம்..என்ன சரியா?"என்று கேட்ட அந்த நொடி ,மனதிற்குள் கடவுளை அவ்வப்போது கோபித்துக்கொண்டாலும் அமுதன் அழைத்த ஒரே காரணத்திற்காக அவனுடன் சென்று வர அந்த நொடியில் சம்மதித்தாள்.

அவளுடைய சம்மதத்தை உணர்ந்தவன் அவளருகே சென்று "தமிழ் எனக்கு தெரியும் நீ இந்த கடவுள்,கோவில் இதை சார்ந்த நம்பிக்கையை தொலைத்து பல நாட்கள் ஆகின்றது ஆனால் என்று அவன் பேச்சை இழுக்க அவளோ அவன் வாயை தன் வலது உள்ளங்கையால் பொத்தி "நீங்க எதும் சொல்லவேண்டாம்,நீங்க கூப்பிட்டிங்க நான் வரேன் அவ்வளவு தான்"என்று வெடுக்கென்று கூறிவிட்டு மீண்டும் சமையலறை நோக்கி நடக்க..

"அம்மாடி கொஞ்சம் காபி கலந்து எடுத்து வா தாயி" என்ற மாமனாரின் குரலில் பரபரப்பாக காபி தயாரிக்க பாலை காய்ச்சினாள். "சரி அம்முலு நான் கிளம்புறன் ஆபிஸ்க்கு"என்று புறப்பட்டான் அமுதன். வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்த பைக்கை கிளப்ப  எத்தனிக்கும் போது ஓடிவந்த தமிழ்ச்செல்வி "என்னங்க உங்க லஞ்ச் பாக்ஸ் மறந்துட்டிங்க"என்று இன்முகத்துடன் அதை அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கி பையில் திணித்து கொண்டு தலையசைத்துவிட்டு உர்ரென்று பைக்கை முறுக்கி கிளம்பினான்.
"அச்சோ பால் காயவச்சது பொங்கிடுச்சே" என்று பதபதைத்து சட்டென்று பாலை இறக்கி ஒருபக்கம் வைத்துவிட்டு உடனே அடுப்பை சுத்தம் செய்தவள்,தனது அடுமணையின் அலமாரியில் இருக்கும் காபிதூள் டப்பாவை எக்கி எடுத்து அதை பாலுடன் சக்கரையும் சேர்த்து ஆத்தியபடியே தன் மாமனார் தர்மலிங்கம் இருக்கும் அறையை நோக்கி நடந்தாள்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now