16

370 20 5
                                    

ஒரு காலத்தில் சதா எந்நேரமும் குழந்தை பற்றிய சிந்தனை இருந்த தமிழுக்கு தற்போது குழந்தையின் சிந்தனை ஏதும் விழையவில்லை. அமுதனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது அவளது மனம்.

'என் மனம் என்ன குப்பைத்தொட்டியா'என்று பலநேரம் அவளுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு அவனை பற்றி சிந்தித்து கொண்டிருப்பாள். 'இப்படியே பண்ணிட்டு இரு உனக்கு பைத்தியம் தான் பிடிக்கப்போது' என்றது அவளுடைய மனசாட்சி. சட்டென ஒரு முடிவுக்கு வந்தாள்.

"நாம ஏன் மும்பை போய் அவரை பார்த்துட்டு வரக்கூடாது " என்று சிந்திக்க ஆனால் இதற்கு தற்ப காரணம் வேண்டுமே என்று யோசித்தாள். தனியே மும்பை செல்வதா அதுவும் ஒரு பெண் என்று குடும்பத்தினர் வசைப்பாடுவார்களே ,அவர்கள் சொல்வதும் சரிதானே ஏன் தனியே போகவேண்டும் இதற்கு வழி கண்டுபிடிப்போம் என்று யோசித்தவள்,தனது தங்கை கலையரசியிடம்..
"ஏ..கலை என்னடி புதுசா கல்யாணம் ஆனவங்க எங்கேயும் ஹனிமூன் போகலையா" என்று ஆரம்பிக்க..

"அட நீ வேற க்கா அவருக்கு எப்ப பாரு ஆபிஸ் வொர்க் நான் என்ன பண்ணட்டும் சொல்லு" என்று சினுங்க உடனே இதான் சாக்கு என்று நினைத்த தமிழ் "உண்மை தான் டி பாவம் அவருக்கு வேலை அதிகம் தான்.. என்ன பண்றது அதான் இப்ப கவர்மென்ட் ஹாலிடே ல  மேதினம். கூடவே சனி ஞாயிறு னு வரிசையாக வருது பாரு..அப்ப வேணும்னா மும்பை போலாமா...சும்மா ஜாலியா ஒரு டூர் மாதிரி" என்று கண்களை உருட்ட கலையரசியிற்கு சிரிப்பே வந்துவிட்டது

"அக்கா..ஏய் கேடி அக்கா..நீ மாமாவை பாக்குறதுக்கு ப்ளான் போடுற இதுக்கு என்னை பகடைகாயாக பயன்படுத்துற அதானே"..என்று பட்டென்று உண்மையை உரைத்தவுடன் அவளுக்கு முகமே மாறியது..

"ஆமாம் டி எனக்கு அவரை பார்க்கணும் டி...ப்ளீஸ் நீயும் ரவிக்குமாரும் என்கூட வாங்க டி..ஊர் சுற்றி பார்த்த மாதிரியும் இருக்கும். நான் என் புருஷனை பார்த்த மாதிரியும் இருக்கும்" என்று கூற கலையரசி சரியென்று ஒப்புக்கொண்டு மும்பை செல்ல மூவருக்கும் விமானம் டிக்கெட் போடப்பட்டது.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now