21

380 19 0
                                    

ஓய்வெடுக்க சென்றவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் முற்றத்தில் உள்ள சோப்பாவில் அமர்ந்து எதையோ மனதில் போட்டு பிசைந்துகொண்டிருந்தாள்.
'வேலையை விட்டுட்டாரு என்றால் இனிமே வருமானத்துக்கு என்ன செய்றது. உடம்பு ஏதேனும் ஒத்துழைக்கவில்லையோ ' என்றபடி கண்டதையும் யோசிக்க ...

ரங்கநாயகி தன் மருமகளிடம் "எதுவும் யோசிக்காத த்தா என் மகன் எந்த முடிவு எடுத்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். நீ வேணும்னா பாரேன் ஏதோ நல்ல காரணத்துக்காக தான் வேலையை விட்டுருப்பான்" என்று ஆறுதல் சொல்ல அதை கேட்டு சற்று மனம் தளர்ச்சியிலிருந்து வெளியே வந்தாலும் அவனுடைய திடிர் மாற்றத்திற்கு காரணம் தெரிந்துக்கொள்ள மனம் ஏங்கியது.

சற்று நேரத்தில் கையில் காபியுடன் அவனது அறைக்கதவை தட்டினாள். அவனும் கதவை திறக்க உள்ளே சென்றவள் தாழிட்டு கொண்டு "இந்தாங்க காபி குடிங்க" என்று அனுசரனையோடு சொல்லிவிட்டு அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்ன அம்முலு அப்படி பார்க்கிற" என்று வினவியவனிடம் பதில் கூற சுதாரித்து " அது வந்து நீங்க திடுதிடுப்புனு வேலையை விட்டுட்டேனு சொல்றீங்க அதான் காரணம் புரியாமல் தவிக்கிறேன்.. என்னனு சொல்லுங்களேன் ப்ளீஸ்" என்று தன் மனதில் பட்டதை கேட்டுவிட சற்றும் தயங்காமல் தன் என்னவளிடம் பதிலளிக்க முன்வந்தான் அமுதன்...

அவளின் கரங்களை இருகப்பற்றிக்கொண்டு "அம்முலு"

"என்னங்க" என்றாள் முகத்தை ஏறிட்டு.

"எனக்காக ஒன்று விட்டுக்கொடுப்பாயா" என்றான் நேரடியாக.

"விட்டுக்கொடுக்கனுமா? என்னதுங்க ஏதோ புதிர் போடுறீங்க சரி சரி விஷயத்துக்கு வாங்க நான் என்ன பண்ணணும்" என்று வினவினாள்

"இந்த இன்ஜினியரிங், அப்றம் இந்த சென்னை வாழ்க்கை இதெல்லாம் எனக்காக விட்டுத்தருவாயா" ? என்று கேட்க அந்த கேள்வியில் அவள் முகம் வாடியது...

"என்னங்க திடிரென இப்படி ஓர் முடிவு. அதுசரி இதெல்லாம் விட்டுக்கொடுத்துட்டு எங்க போறதாம்" என்றாள்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now