14

385 20 2
                                    

கலையரசியின் திருமணம் நெருங்கிக்கொண்டிருக்க,இரண்டு நாள் முன்பு சங்கீத் பங்க்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டது..காலையில் ஸ்நானம் முடித்துவிட்டு மெஹந்தி டிசைனரை வரவழைத்து பெண்கள் கூட்டம் அவர் முன்பு அமர்ந்து கைகளை நீட்ட ஒவ்வொருவருக்கும் மெஹந்தி வைக்கவே மணி பத்து தாண்டியது. இரண்டு மணி நேரம் கழித்து கைகளை அலம்பிட்டு சாப்பிட்டு முடிக்கவே மதியம் இரண்டு ஆனது. சாயந்திரம் எல்லோரும் தயாராகி வீட்டு முற்றத்தில் சுற்றி அமர்ந்து ஆண்கள் பெண்கள் என்ற இரு அணிகளாக பிரிந்து பாடலுக்கு நடமாடினர். உறவினர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள.. அமுதன் மட்டும் இன்னும் வரவில்லை என்ற கவலை தமிழுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் ஆடிப்பாடி சுற்றி தாரிந்தாள்.

"உன் காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா" என்ற ஒரு தாண்டியா பாடலில் வரும் வரிகள் தமிழ்ச்செல்வியை ஏதோ செய்ய சட்டென்று நடனத்தை நிப்பாட்டி ஓரமாக போய் அழத்துவங்கினாள். அவள் பின்னால் இருந்து யாரோ இழுக்க திரும்பி பார்த்த அவளுக்கு அதிர்ச்சி...
"என்னங்க.. என்று அவனை அணைத்து முத்தமிட்டாள்"...அவள் முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் அவளை இருக அணைத்துக்கொண்டான். அவனுடைய அணைப்பில் ,அந்த இருகமான பிடியிலிருந்து வெளியே வர மனமில்லாமல் சற்று நேரம் அப்படியே இருக்க....

சுற்றி இருப்பவர்கள் பார்க்க போகிறார்கள் என்ற பதற்றத்தில் அமுதன் தானே அவளை விலக்கி விட்டு...
"அம்முலு நான் எங்க வராமல் போயிடுவேனோனு பயந்துட்டியா. கலையோட கல்யாணத்துக்கு நான் எப்படி வராமல் போயிடுவேன்"என்று புன்னகையிக்க...

"ஐ.வி.எப் தோல்விக்கு பிறகு நம்ப வாழ்க்கையே தலைகீழாக ஆயிடுச்சு போங்க...இதுக்கு அந்த ஹாஸ்பிட்டல் போகாமயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது" என்று கூற அவள் கைகளை பற்றியவன்.

"அம்முலு... நம்மளோட பிரச்சினை இந்த குழந்தை மட்டும் கிடையாது அதை தாண்டி ஏதோ ஒரு புரிதல் நமக்குள் இல்லைனு தோனுது..கல்யாணம் ஆன நாளில் இருந்து நீ சதா வீட்டுவேலை என்ற கதியில் இருப்ப..நானும் வேலை முடிச்சிட்டு வந்து என்னோட பொழுதை போக்க டி.வி ,கம்ப்யூட்டர் என்று இருப்பேன். இப்படியெல்லாம் இருந்தால் நல்லாயிருக்கும் என்று நிறையா ஆசைப்பட்டுருக்கேன். ஆனால் உன் மனசு பூரா குழந்தை பற்றிய நினைப்பு மட்டுமே இருந்திருக்கு..இப்படி முரன்பாடான நினைப்பு இதெல்லாம் ஏதோ நமக்குள் ஓர் வெறுப்பு அது இந்த ஐ.வி.எப் தோல்வி மூலம் வெளிப்பட்டுருக்கு. சரி விடு கூடிய சீக்கிரம் உன்னை மும்பை கூட்டிட்டு போயிடுறன்"என்று அவன் கூறிய மறுகணமே அவனை நிமிர்ந்து பார்க்க கண்களிலிருந்து நீர் உருண்டோடியது.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now