24

376 21 3
                                    

மேகாவிடம் பேசத்துவங்கினான் கிருஷ்ணமூர்த்தி. தான் ஒரு பிஸினஸ்மேன் என்பதை முதலில் கூறி பின் சற்று பின்னோக்கி தன் கடந்த கால விஷயங்களை அசைப்போட துவங்கினான். அவனுக்கு வந்த முதல் காதல் பற்றி எல்லாம் பேசவே ஏதோ ஒரு நட்புணர்வு போல் அவளுக்கு தோன்றியது . ஏதோ ஒரு சவுகரியமான சூழ்நிலையில் இருப்பது போல அவளுக்கு உள்ளுணர்வு தோன்றியது.

"கிச்சா சாரி சாரி கிருஷ்ணமூர்த்தி சார்..."என்று ஏதோ சொல்ல வாய் வந்தபோது அவன் குறுக்கிட்டு "ஏய் கிச்சா என்று கூப்பிடு பரவாயில்லை, எதுக்கு சார் மோர் எல்லாம்"என்று சிரித்துக்கொண்டே கூற..

"அப்படியென்றால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா நான் செல்ல பெயர் வச்சு கூப்பிடுறதுல" என்று தன் தோளை குலுக்கியபடி கேட்க.. அவனோ அவள் கண்களை ஏறெடுத்து பார்த்து விட்டு "எப்போ நீ உரிமையா கிச்சானு கூப்பிட்டயோ அப்போவே என்னை நீ மனசாற ஏத்துக்கிட்டனு அர்த்தம்"என்று கண்சிமிட்ட, ஐயோ தனக்கே தெரியாமல் தன்னுள் கிருஷ்ணமூர்த்தி நுழைந்துவிட்டாரே என்று வெட்கத்தில் கண்ணம் சிவக்க அதை புரிந்துக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி "அ...போதும் மேகா வெக்கத்தை மிச்சம் வச்சுக்கோ" என்று நக்கலடிக்க அந்த சூழ்நிலையில் எப்படிடா வெட்கத்தை விரட்டி அடிப்பது என்று தெரியாது "ஏங்க உங்களை உங்கள் அம்மா கூப்பிடுற மாதிரி கேக்குது என்று நாடகமாட அதை புரிந்துக்கொண்டு "சரி பெரியவங்க தேடுவாங்க வாங்க போவோம்" என்று அவனழைக்க அவளோ தயங்கி தயங்கி நிற்கவே

"ஏன் மேகா என்ன ஆச்சு" என்றுரைக்க

"நீங்க முதல்ல போங்க கிச்சா நான் அப்றம் வரேன்" என்று கூற அவனோ "ஓ..அறையிலிருந்து வெளியே வர வெட்கமோ சரி சரி நா முதல்ல போறேன் நீங்க மெதுவா வாங்க" என்றுரைத்துவிட்டு தன் ஷர்ட் காலரை சரிசெய்தவாறு வெளியே வந்தான்

"கிச்சா என்னடா பொண்ணு பிடிச்சிருக்கு போல" என்று கேட்க

"மா என்னமா முடிவே பண்ணிட்டிங்களா"என்று சிரிக்க

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now