18

364 17 2
                                    

தமிழ் செய்த தவறை தான் செய்யக்கூடாது என்று நினைத்த கலையரசி ஒருவருடத்திற்கு குழந்தை பேறு வேண்டாமென நினைத்து அதனை தள்ளிப்போட்டாள். அந்த ஒருவருடம் தன்னுடைய கணவனுக்காக மட்டுமே நேரம் செலவிட வேண்டும் தங்களது காதல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துவிட அந்த முடிவு அவர்கள் நினைத்தப்படி நல்லதே செய்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிதலுடன் வாழ்ந்தனர். இந்த புரிதல் தான் தமிழ்ச்செல்விக்கு அமுதன் மீது இல்லாமல் போனது...ஆனால் இன்றோ அவர் இல்லாமல் அவளால் இருக்கவே முடியவில்லை.. இது அல்லவா விதி.விதி யாரைத்தான் விட்டுவைக்கும். இப்படி நாட்கள் மெல்ல அசைப்போட்டபடி நகர்ந்துகொண்டே இருக்க அன்று எதர்ச்சையாக குமரன் வீட்டிற்கு வந்தான். என்றும் இல்லாமல் இன்று என்ன வீட்டை தேடி வந்திருக்கிறான் என்ற சந்தேகம் ரங்கநாயகியிற்கு ,ஆனால் அவனிடம் அலட்டிக்கொள்ளாமல் எதார்த்தமாக அவனிடம் "என்னடா மகனே காத்து இந்த பக்கம் வீசுது " என்றபடி நாசுக்காக கேட்க தண்ணீர் பருகியவாறு "ஏன் வரக்கூடாதா" என்று அவன் கேட்க...

"அதற்கென தாராளமாக வரலாம் அடிக்கடி வந்தா நாங்க வேண்டாம்னா சொல்லப்போறோம். நீ என்னமோ ஆடிக்கு ஒருவாட்டி அமாவாசைக்கு ஒருவாட்டி வீட்டுக்கு வந்துபோனா எங்களுக்கு சந்தேகம் தானே வரும்"என்று சொல்லிமுடிக்க.."சரி சரி அண்ணி எங்கே" என்று வினவினான்.

"சமையல்கட்டுல இருப்பாங்க...ஏன் டா" என்று கேட்பதற்குள் சமையலறையை நோக்கிச்சென்றான்.

"வா..குமரா..என்ன கிச்சனுக்கே வந்துட்ட சாப்பிட எதாவது வேண்டுமா"?என்று கேட்க...

"அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணி உங்கள் கிட்ட கொஞ்சம் பேசனும்"என்று கூறவே அவளுக்கு பதற்றம் தொற்றியது.."சொல்லுடா குமரா என்ன ஆச்சு" என்று கேட்க..அவனோ தலையை தொங்கவிட்டு "அண்ணி அது வந்து காலேஜ்ல ஒரு பொண்ணு.."

"ஒரு பொண்ணு"? என்ன சொல்லு என்று பதற்றத்துடன் கேட்க..

"அந்த பொண்ணு பேரு ஸ்ருதி... இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம் . இது எப்படியோ அந்த பொண்ணோட பேரண்ட்ஸ்க்கு தெரிஞ்சிருச்சு. இப்ப அவளை அவுஸ்அரஸ்ட் மாதிரி வீட்டிலேயே வச்சிருக்காங்க..அவளோட படிப்பு வீணாபோயிடுமோனு பயமாக இருக்கு அண்ணி. பாவம் அண்ணி அவ..என்னை மறக்கவும் முடியாம படிப்பை நிறுத்தவும் மனமில்லாமல் உள்ளுக்குள் குமுறிட்டு இருக்காள்" என்று கண்கலங்கியபடி அவன் சொல்ல...

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now