2

866 27 4
                                    

பொறுமை நம்பிக்கை இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒருமுறை அவள் உச்சரித்து பார்த்த பின்பு தான் புரிந்தது இவ்வளவு நாட்கள் அதை இழந்துவிட்டோம் என்று..
"தமிழ்" என்ற அழைப்பில் தெளிந்தவள் தனது காலணியை அணிந்துக்கொண்டு அவனுடன் பைக்கில் ஏறினாள்.

அந்த குப்பைகிடங்கை மீண்டும் கடக்க நேரிட்டது,எதர்ச்சையாக அதை நோட்டமிடும்போது தான் அங்கு ஒரு 50வயது மதிக்கதக்க ஒருவர் எதையோ தேடிக்கொண்டு இருப்பதை உணர்ந்தாள் தமிழ்ச்செல்வி.
"யார் இவர் ,இரண்டு நாட்களா நானும் பார்க்கிறேன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் அல்லவா தேடுகிறார்" என்று அவளுக்குள் முனுமுனுக்க..

"அம்முலு.. என்னடா யாரை பற்றி சொல்ற என்று அமுதன் கேட்க"

"இல்லைங்க,அதோ அந்த ஆளு இரண்டு நாளா ஏதோ தேடிட்டு இருக்கிற மாதிரியே தெரிது அதான். இங்கே அப்படி என்ன இருக்கு என்று புரியவில்லை"என்று அவள் கூற அதற்கு அமுதன் சிரித்துக்கொண்டே "தமிழ் அதெல்லாம் உனக்கு எதுக்கு. அவருக்கு என்னவோ யாருக்கு தெரியும்.. இப்படி மத்தவங்க என்ன பன்றாங்கனு கவனம் செலுத்த ஆரம்பிச்சினா நீ நிம்மதியாவே இருக்க முடியாது"என்று அவளிடம் எதார்த்தமான தோரணையில் கூற அதை அவள் மனதில் உள்வாங்காதவாறு மறுபடியும் அந்த நபரை கவனித்தவாறே இருந்தாள். எப்படியோ அந்த இடத்தை கடந்தபின்பு சிறிது தூரத்தில் வீடு வந்தே சேர்ந்தனர்.

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மாமனார் தர்மலிங்கம்"என்ன மருமவளே கோவில் போயிட்டு நிம்மதியை தேடிட்டு வருவேனு பார்த்தால் எதையோ யோசிச்சிட்டு வர"என்று கேட்க அதைக்கேட்டு சிரித்த அமுதன் "நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க அப்பா,இப்படித்தான் இவள் எதையாவது யாரைபற்றியாவது சிந்தித்து கொண்டே தனது நிம்மதியை இழக்கிறாள்"என்று வெடுக்கென்று கூற..

"போதும் போதும் வாங்க உள்ள" என்று சிரித்துக்கொண்டே தமிழ் உள்ளே சென்று இரவு உணவை தயார் செய்ய துவங்கினாள்.
"மாமா கேழ்வரகு ரொட்டி பன்னவா?"என்று ஒருமுறை அவரிடம் அபிப்பிராயம் கேட்க தர்மலிங்கம் சரி என்பது போல் தலையசைக்க கேழ்வரகு ரொட்டிக்கு தேவையான பொருட்களை எடுத்து மேஜைமேல் வைக்கவும் சமையலறையினுள் அமுதன் நுழையவும் சரியாக இருந்தது.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now