25

380 21 2
                                    

தன் கிராமத்திற்கு வந்து ஒருசில தினங்கள் கடந்துப்போன நிலையில் தன் நிலத்தை சீர் செய்யும் முயற்சியில் அமுதன் இறங்கினான். தரமான செம்மண் பூமி,எந்த பயிரானாலும் நன்றாக விளையும் ஆனாலும் சுற்றி இருக்கும் குப்பைகளை அகற்றி பள்ளம் மேடுகளை சமநிலை படுத்தி சீர்படுத்தவே களத்தில் இறங்கினான்.

தனியாளாக செய்ய முடியாது தான் எனவே தனக்கு துணையாக தந்தையை அழைத்துக்கொண்டான்.

"அமுதா...என் பாட்டன் பூட்டன் சம்பாதித்த நிலம் யா இது. இப்பதான் இதுக்கு ஒரு கலையே வந்திருக்கு. எப்படியோ நீ விவசாயம் பண்றது நினைக்கிறப்ப மனசு லேசான மாதிரி இருக்கிறது"என்று தர்மலிங்கம் கண்கலங்க

"ஐயோ அப்பா..அப்படினா இம்புட்டு நாள் விவசாயம் பண்ண முடியல என்று வருத்தப்பட்டிங்களா ? பா...இது தான் நம்ப பாரம்பரிய தொழில்.. இது தான் நீ பண்ணணும் என்று சொல்லியிருந்தால் என்னைக்கோ பண்ணியிருப்பேனே பா...நீங்க தானே பா என்னை இது படி அதுபடி னு கடைசியில் சென்னைக்கு அனுப்பி வச்சிங்க. சென்னை போனப்ப அந்த உயரமான கட்டிடங்களும் அங்கிருக்கும் தொழிற்சாலைகளும் கண்களை மயக்கிடுச்சு பா. ஆனால் இனி இந்த விவசாயம் தவிர வேறு எதுவும் எனக்கு கனவோ லட்சியமோ இல்லை "என்று சற்று உணர்வுபூர்வமாக தந்தையிடம் சொல்ல அவ்வார்த்தைகள் எல்லாம் தர்மலிங்கத்திற்கு இனிப்பாய் இருக்க...வேலை செய்த களைப்பு கூட நீங்கிவிட்டது போலும். தோளில் இருக்கும் துண்டினை உதறி கீழே போட்டு தன் ஆசை மகனை அமரச்சொன்னார்.

"பா...விடுங்கப்பா எதுக்கு துண்டெல்லாம். என் மண்ணு என் சட்டையில் ஒட்டுறது எனக்கு பெருமை தான்"என்று மெச்சிக்கொள்ள.... மகனின் பேச்சை ரசித்தவனாய்...

"இந்தா அமுதன்.. உங்கள் அம்மா கொடுத்தனுப்பிய பழைய சோறு. வா இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்"என்றுரைக்க... அதை அமிர்தம் போல உண்டவன்...
"செம்ம ...இந்த வேகாத வெயிலுக்கு இதை விட அருமையான சாப்பாடு இருக்கா...." என்று மெய்மறந்து உண்ண ஆரம்பித்தான்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now