27

390 21 3
                                    

அமுதன் தான் சீர்படுத்திய நிலத்தில் தக்காளி பயிரிட்டான். எளிதில் விளைச்சல் தரக்கூடிய ஓர் பயிர் என்பதால் அதனை பயிரிட்டான். ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தாமல், காய்கறி கழிவுகளை வீடு வீடாக போய் சேகரித்து வந்து அதை மக்க வைத்து பின் அதை உரமாக பயன்படுத்தினான்.

"என்ன அமுதா இயற்கை விவசாயமா"என்று ஊர்மக்கள் வியந்து கேட்க...அதற்கு அவன் சொன்ன பதில் அவர்களை கண்கலங்க வைத்தது..
"பயிர்களை மலடாக்கி அதை விளைவித்து வியாபாரமாக்கி மக்களை மலட்டாக்குவது போதும்.. இனியாவது மாறுவோம்" என்று அவன் கூறியது நெஞ்சை உருக்கியது.

தமிழச்செல்வியும் தனது படிப்பை துவங்கினாள். அவ்வப்போது அமுதனுக்கு உதவியும் செய்து வந்தாள். இப்படியே நாட்களும் கழிந்தன...மேகாவின் திருமணம் நெருங்கியது. அவளது அழைப்பிதழை ஏற்று அமுதனும் தமிழ்ச்செல்வி யும் மும்பை சென்றனர்.

"டேய் நண்பா எப்படியோ வந்துட்ட ஐயம் ஹேப்பி" என்று மேகா சொல்ல அவள் தோளை தட்டியபடி" ஏய் லூசு இதெல்லாம் ஒரு விஷயமா , நீ கூப்பிட்டதுக்கு மரியாதை பண்றதுக்கு வந்திருக்கோம் இதுல இவ்வளவு சந்தோஷ படுறதுக்கு என்ன இருக்கு." என்று சற்று எதார்த்தமாக கூற அதை கேட்ட அவளுக்கு முகம் வாடியது.

"அப்படினா நான் கூப்பிடலைனா வந்திருக்க மாட்டிங்களா அமுதன்" என்று முகத்தை கோபமாக வைத்து கேட்க...அவளை சமாதானம் படுத்திய தமிழ்ச்செல்வி "இங்க பாரு டா மேகா ப்ரண்டாவே இருந்தாலும் கூப்பிடாம வரக்கூடாது அது நாகரிகமும் கிடையாது. ஒருவேளை நீ கூப்பிடாமல் இருந்திருந்தால் எங்களோடு வாழ்த்துக்கள் உன்னை வந்து சேர்ந்திருக்கும். " என்று கூற அதை கேட்ட மேகா "சரி அதை விடுங்க விடிந்ததும் கல்யாணம், இதோ என் கிச்சு எப்படி ஜோடி பொருத்தம் பார்த்து சொல்லுங்கள்" என்று கேட்க..

"அடியேய் நாங்க பிடிக்கல வேண்டாம்னு சொன்னா கல்யாணம் நிருத்திருவியாக்கும். போய் வேலையை பாரு" என்று அமுதன் கூற அவளோ சட்டென்று "நிச்சயமா நிருத்திடுவேன் நீ நியாயமான காரணம் சொல்லி வேண்டாம்னு சொன்னா" என்று கூற அதை கேட்டு ஒரு நிமிடம் ஆடிப்போக...

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now