5

520 24 3
                                    

அழைப்பிதழை  வாங்கியவளுக்கோ அதை வீட்டில் எவ்வாறு காட்டுவது,தன்னுடைய கணவன் திருமணத்திற்கு செல்ல அனுமதிப்பான? என்ற பல யோசனைகள் அவள் மூளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன...அவள் வழக்கமாக செல்லும் ஆட்டோவும் வந்துவிட்டது அதில் ஏறிக்கொள்ள ஆட்டோவும் கிளம்பியது.

வீடுவரும் வரை அந்த அழைப்பிதழை பார்த்தவாறு இருந்தாள். வீட்டினுள் நுழைந்ததும் கை கால் அலம்பிவிட்டு தேநீர் தயாரிக்க உள்ளே சென்றாள்.
வழக்கமாக காபி குடிக்கும் அவளுக்கோ தேநீர் மீது எப்படி ஆசை வந்தது  என்று கேட்டால் கேண்டினில் அவ்வப்போது உதயாவுடன் தேநீர் அருந்தும் பழக்கத்தினால் தான், இப்படி அவனுடன் பழகும்போது கிடைத்த பழக்கத்தை கூட மாற்றமுடியவில்லையே எப்படி அவனுடைய நட்பை ஒரேடியாக மறப்பது,அது கடினம் தான் ஆனாலும் முயற்சித்து தானே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்தாள்.

"என்ன அம்முலு மேஜைமேல் ஏதோ அழைப்பிதழை பார்த்தேன்"என்றான் அமுதன்.

"ஆமாங்க உதயாவுக்கு கல்யாணமாம் அதான் கொடுத்தான்,ஏன் இதில் எதாவது பிரச்சனையா"?என்றாள் தன்னுடைய திருத்திய புருவத்தை உயர்த்தியப்படி.

"இல்லை... சும்மா தான் கேட்டான்,சரி என்ன பரிசு வாங்கலாம் உன் நண்பனுக்கு"என்று வினவ அதை கேட்டு ஆச்சரியத்துடன் அவனை நோக்க "என்ன பாக்குற தமிழ்,ஓ கல்யாணத்திற்கு போகவே கூடாது னு சொல்லிடுவேனோ என்று பயந்தியா..இங்க பாரு அம்முலு நீயும் அவனும் நெருக்கமான தோழர்களா பழக வேண்டானு தான் சொன்னேன் மற்றப்படி அடியோட அவனுடைய நட்பை மறக்க சொல்லவில்லை"என்று அவள் தலையை வருடியவாறு கூறினான் அமுதன்.

"என்னங்க... நான் தெரியாமல் தான் கேக்குறன் அப்படி என்னங்க நாங்க நெருங்கி பழகினோம். ஒரே பெஞ்சில் உக்காருவோம்,கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருப்போம். யுனிவர்சிட்டி கேண்டினில் டீ வாங்கி சாப்பிடுவோம்,இதை தவிர நாங்க எதுவுமே பண்ணவில்லை.. அப்றம் ஏங்க உங்களுக்கு அப்படி தோனுச்சு. சமுதாயத்தில் நடக்கிற பிரச்சினை யை பார்த்து பயம் என்றால் எப்படிங்க ?எங்கோ எவனோ ஒருவன் செய்யும் தவறிற்காக ஒட்டுமொத்த ஆண்களையே எப்படிங்க தவறு என்று சொல்லமுடியும். அதுவும் உதயா பற்றி எனக்கு தெரியாதா என்ன"? என்று கேள்விகளை அம்பு போல் பாய்க்க அதில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
....
மறுநாள் காலை மருத்துவமனையிலிருந்து அமுதனுக்கு அழைப்பேசி வந்தது. அவன் காலை ஒன்பது மணியளவில் மருத்துவமனைக்குச் சென்றான். இவளோ ஒன்றும் புரியாமல் 'என்ன இவர் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி ஹாஸ்பிட்டல் போயிருக்காரு,அதுவும் நம்மை கூப்பிடாமல்' என்று நினைத்தாள்.

காரிகையின் கனவு (Completed Novel)Kde žijí příběhy. Začni objevovat