23

372 20 1
                                    

அவளது அழைப்பை ஏற்க எத்தனிக்கும் போது தமிழ்ச்செல்வி விழித்துக்கொள்ள.."ஏங்க ஏதோ போன் ரிங் ஆகுது யாருங்க மாமாவா?"

"இல்லை.. அது வந்து மேகா" என்று தயங்கியவாரே அவளிடம் பதிலளிக்க அவனது தடுமாற்றம் அவளுக்கு புரிந்தது" என்னங்க எதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் போலருக்கு எடுத்து பேசுங்க" என்று எந்த வித கலக்கமும் இல்லாது அவள் கூறவே தன் என்னவளின் மாற்றத்தை நினைத்து மகிழ்ச்சியடைய சற்று நேரத்தில் மீண்டும் வந்த அழைப்பினை எடுத்து பேசத்துவங்கினான்..

"ஹாய் மேகா சொல்லு,எப்படியிருக்க எதாவது முக்கியமான விஷயமா " என்று கேட்டான் எடுத்த எடுப்பிலேயே

"ஐயோ இவரு வேற இப்படியா எடுத்தவுடன் கேட்பாரு" என்று மனதில் தமிழ் திட்டிக்கொள்ள எதிர்முனையில் இருக்கும் மேகாவோ ஏதோ சங்கடமான சூழ்நிலை போலும் என்று நினைத்துக்கொண்டு "நான் அப்றம் பேசுறன்" என்றபடி போனை வைக்க..

"ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் போய்விட்டாளே" என்று கூறிக்கொண்டு போனை எடுத்து பாக்கேடில் சொருக..அதை கண்ட தமிழ் "என்னங்க இவ்வளவு தானா உங்கள் ப்ரண்ட்ஷிப் "?

"ஏன்" என்றான் அமுதன்.

"இல்லை இரண்டு வார்த்தை கூட விசாரிக்காமல் போனை வச்சிட்டிங்க. ' என்று கேட்க அதை கேட்டவன் "ஆமாம் பேசுனாலும் ஏன் கொஞ்சி குழாவுற என்று கேப்பீங்க பேசாட்டியும் ஏன் பேசுல என்று கேப்பீங்க போங்கடி நீங்களும் உங்கள் எண்ணமும்" என்று முனவ அதை கேட்டவளுக்கோ சிரிப்பை அடக்க இயலவில்லை.

"என்ன மேடம் சிரிப்பு" ? என்று கண்ணத்தை இடித்தவாறு கேட்க அவளோ "உங்கள் நிலமையை நினைத்து சிரித்தேன். விடுங்க விடுங்க" என்றாள் அவனை சீண்டியபடி. இப்படியே ஊர் வந்து சேர்ந்தனர்.

அந்த அழகான கிராமம் அவர்களை அன்புடன் வரவேற்றது. ரொம்ப நாட்கள் கழித்து அந்த கிராமத்திற்கு தமிழும் அமுதனும் வரவே ஊர்மக்கள் அவர்களை திருவிழாவில் இழுக்கும் தேர்போல அவர்களை ரசித்துக்கொண்டிருந்தனர்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now