திருமணக்காதல் 14

762 34 2
                                    

மறுநாள்..

இன்னைக்கு க்ளாஸ் வருவியா டி.. இல்ல ரெஸ்ட் எடுக்க போறியா.. - ஸ்ரீ
இல்ல டி வருவ.. வா போலாம்.. வீட்ல போர் அடிக்குது - அனன்

ம்ம்.. சரி.. சரி இன்னைக்கு மேம் கிட்ட சொல்லிடலாம் டி - ஸ்ரீ
எத பத்தி டி - அனன்

எருமை... நீ இன்னும் ஒரு வாரம்தான டி க்ளாஸ்க்கு வருவ - ஸ்ரீ
ஆமால.. சரி.. நீ போவியா  - அனன்

தெரில  அனன்.. வேற எதாச்சும் ஒர்க் கிடைக்குதானு பாக்கனும் அப்றம்தா முடிவு பண்ணனும்.. - ஸ்ரீ
ம்ம்.. சரி அப்றம் நேத்து நா கேட்டதுக்கு பதில் சொல்லாமலே போய்ட்ட - அனன்

இதுக்கு மேல அத பத்தி பேச வேணாம் அனன்.. ப்லீஸ்..
ம்ம்.. சரி சரி... - அனன்

அப்றம்.. விக்னேஷ் நேத்து போன் பண்ணா டி.. ஊர்ல இருந்தானா அதா வர முடிலனு சொன்னா.. இன்னைக்கு ஈவ்னிங் க்ளாஸ் வரென்னு சொன்னா.. - ஸ்ரீ

ஓ.. சரி டி.. நீ கிளம்பினதும் போன் பன்னு - அனன்
ம்ம். சரி byee - ஸ்ரீ

ப்ரித்வி வீட்டில்..

என்ன டி ப்ரியா இது.. எப்போ இவங்க லவ் பண்ணி எப்போ கல்யாணம் பண்றது... - யாமினி
ஆமா டி.. இவங்களுக்கு கல்யாணம் ஆகுறதுக்குள்ள நமக்கு வயசு ஆயிடும்... - ப்ரியா

இன்னும் ரெண்டு நாள்தான் வேற க்ளாஸ் இருக்கு.. அதுக்குள்ள எப்படி டி இவங்கள லவ் பன்ண வெக்கிறது .. - யாமினி

என்ன மகளிர் குழுவே.. என்ன மீட்டிங்.... - அசோக்
வேற என்ன எல்லாம் உன் ப்ரண்ட பத்திதான் - ப்ரியா

அவன பத்தி என்ன.. மீட்டிங் - அசோக்

இந்த காதல் ஜோடிய எப்படி சேத்து வெக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தோம் - யாமினி

ம்ம்.. கவலை படாதீங்க.. இன்னைக்கு ஈவ்னிங் ப்ரித்வி ஸ்ரீகிட்ட பேசுரனு சொல்லிருக்கா.. - அசோக்

அப்பப்பா.. அப்டியே பேசி கிளிச்சிடுவான்.. நீ வேற - ப்ரியா

உனக்கு என்ன புடிச்சிருக்கா.. புடிக்கலையானு ப்ரித்வி கேப்பான்.. அதுக்கு அவ நா கிளம்பணும்னு சொல்லுவா..
இத தான 4 எபிசோட் போய்ட்டு இருக்கு.. இப்போ மட்டும் அப்டி என்ன புதுசா பேசிட போறாங்க... - யாமினி

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now