திருமணக்காதல் 39

734 35 0
                                    

மறுநாள் காலை🌄..

குட் மார்னிங்🙂 - ப்ரித்வி
குட் மார்னிங்.. ஆபிஸ் கிளம்பல - ஸ்ரீ

இல்ல அமிர்தா.. இன்னைக்கு ஒரு ப்ராஜக்ட் ஒர்க் இருக்கு அதான் வீட்ல இருந்தே செய்யலாம்னு லீவ் போட்டோம் - ப்ரித்வி

ஓ.. - ஸ்ரீ
என்ன டா ரெடியா.. - அசோக்
ம்ம்.. ரெடி டா - ப்ரித்வி

ம்ம்.. மேல என் ரூம்க்கு போயிடலாம் டா.. இங்க டிஸ்டர்பன்ஸா இருக்கும் - அசோக்
ம்ம்.. சரி டா.. கௌதம் எங்க - ப்ரித்வி

அவன் என் ரூம்லதான் இருக்கான்.. வா போலாம் - அசோக்
என மூவரும் அசோக்கின் அறையில் அவர்கள் வேலையில் மூழ்கினர்..

ஸ்ரீம்மா நா கோவிலுக்கு போய்ட்டு வந்துற டா - AM
ம்ம்ம்🙂.. சரி ம்மா - ஸ்ரீ

AM கோவிலுக்கு கிளம்ப ஸ்ரீ வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்..

சட்டென தலை சுற்ற அருகில் இருந்த சோபாவில் சிறிது நேரம் அமர்ந்தாள்...

ஸ்ரீ மாத்திரை போடனும் கொஞ்சம் தண்ணி கொண்டு வரியா என தன் அறையில் இருந்து கத்தினாள் யாமினி...

ம்ம்.. வர யாமினி.. என அவள் எழுவதற்குள் ப்ரியா அங்கு வர..

ப்ரியா கிட்சன்க்கா போற - ஸ்ரீ
ம்ம்.. ஆமா ஸ்ரீ.. - ப்ரியா

யாமினி தண்ணி கேட்டா கொஞ்சம் குடுத்துட்ரியா - ஸ்ரீ
ம்ம்.. சரி ஸ்ரீ என அவள் உள்ளே சென்றாள்..

ப்ரியா கொஞ்சம் நில்லு😡... மாசமா இருக்குற பொண்ணு மாத்திரை போடனும்னு தண்ணி கேக்குறா.. உடனே ஓடி போய் குடுக்காம.. சொகுசா உக்காந்துட்டு இவள வேலை வாங்குரியா நீ - சசிகலா

இல்ல அத்தை.. கொஞ்ச டயர்டா இருந்துது அதான் - ஸ்ரீ

அப்டி நீ என்ன பண்ணிட்ட.. எப்ப பாத்தாளும் உடம்பு முடில.. பணக்காரன் வீட்டு பையன் கிடைச்சிட்டான் இனிமே எல்லாம் உக்காந்த எடத்துலயே வரும்னு நெனப்பு😡..

அப்டில்லாம் இல்ல அத்தை..

வேற எப்டி.. என் பொண்ணு மாத்திரை போடாம இருந்தா உன் குழந்தை போன மாதிரி அவளுக்கும் ஏதாச்சும் ஆகணும்.. அதான..

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)حيث تعيش القصص. اكتشف الآن