திருமணக்காதல் 1

4.1K 73 4
                                    

இனிமையான காலை பொழுதில் குயிலும் குருவியும் இசை பாட, காலை கதிரவன் அதன் வேலையை செவ்வனே செய்ய, அம்மாவின் காலை அர்ச்சனையுடன் கைப்பேசியின் ஒலியிலும் தனது இமைகளை சிரமப்பட்டு திறந்தாள் நம் கதையின் முதல் நாயகி அமிர்தஸ்ரீ

      உனக்கென்ன நானும்          எனக்கென்ன நீயும் உலகினில்   வாழ்வோம் எந்நாளுமே..             இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே..

என்று அழைத்த தனது கைப்பேசியை எடுத்தவள்...

ம்ம்.. சொல்லு டி,

என்ன சொல்றது கிளம்பு டி டைம் 7.30 ஆகுது..

ம்ம்..சரி என்று போனை கட் செய்தவள் தன் அம்மாவிடம் சென்றாள்..
அம்மா டைம் பாத்தியா கொஞ்சம் எழுப்ப கூடாதா..

கம்முன்னு போய்டு இங்க ஒருத்தி மாடு மாறி கத்திட்டு இருக்க நல்லா தூங்கிட்டு என்ன வந்து..

சரி சரி விடு மா.. நா போய் கிளம்புற டைம் ஆயிடுச்சு.. அப்பா எங்கம்மா??

அவரு ஆபிஸ் கிளம்பிட்டாரு.. இன்னைக்கு காலேஜ் லீவுனு சொன்ன🤔🤔

இல்லையே நா எப்போ அப்டி சொன்ன.. இன்னிக்கு ஒரு க்ளாஸ் இருக்கு மா அதான் போகணும். சரி நா கிளம்புற..

என வீட்டில் இருந்து தனது டூ வீலரில் பறந்தவள் நேராக  தனது தோழியின் வீட்டை அடைந்தாள்..

நேராக சென்று காலிங் பெல்லை அழுத்தினாள் ஸ்ரீ..

கதவை திறந்தவர்..
வா மா ஸ்ரீ எப்படி இருக்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..

ம்ம்.. எல்லாரும் நல்லா இருக்காங்க மா.. அந்த மாடு எங்க மா.. என்ன சீக்கிரம் வர சொல்லிட்டு இன்னும் அவ என்ன பன்றா..

கத்தாத டி வந்துட்டேன்.. என்றே தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் நம் கதையின் இரண்டாவது நாயகி அனன்யா😍😍
வா டி போலாம்..

போலாமா.. அடியே இரு டி சாப்பிட்டு போவோம்..

கண்டிப்பா அது இல்லாமையா என்று இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க அந்நேரம் அனன்யாவின் போன் அழைத்தது

தோழமை உறவுக்கு ஈடேதம்மா...
நீ சொல்லும் மொழி நானே கேட்ப்பேன ம்மா...
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே..

யாரு டி அனன்???

கவிதா டி..
சரி இன்னும் 30 மினுட்ஸ்ல வந்துடுவோம்னு சொல்லு..

சரி என அவ்வாறே சொல்லி.. போனை கட் செய்தாள் அனன்யா..
சீக்கிரம் போகணும் டி .. அங்க எல்லாரும் ரீச்டு..

ம்ம்.. சரி என சாப்பிட்டு இருவரும் ஸ்ரீயின் வண்டியில் பறந்தனர்🛵🛵🛵

அவங்க சேரதுக்குள்ள அவங்கள பற்றிய குறிப்புகள்

( அமிர்தஸ்ரீ வீட்டின் கடைக்குட்டி
அம்மா தமிழ்ச்செல்வி இல்லத்தரசி, அப்பா குமார் ஸ்டீல் கம்பெனில ஒர்க் பண்றாங்க,,
அக்கா வெண்பா கல்யாணம் முடிந்து 4 வருஷம் ஆகுது,,
இப்போ அமிர்தஸ்ரீதா வீட்ல எல்லாமே,, ரொம்ப வாலு, வாயாடி, மிடில் கிளாஸ் குடும்பம்)

( அனன்யா வீட்ல முதல் பொண்ணு, அம்மா அன்புச்செல்வி இல்லத்தரசி,, அப்பா ரகுவரன் பிளம்பர்,
தம்பி ரஞ்சித் எப்படியோ 10th பாஸ் பண்ணிட்டு 11th போறாரு,
அனன்யா ரொம்ப அமைதி நம்ப ஸ்ரீக்கு அப்டே ஆப்போசிட்,, கொஞ்சம் நெருங்கிட்டா நல்லா பேசுவா,,

(இவங்க ரெண்டு பேரும் 11thலருந்துதா ஃப்ரண்ட்ஸ் ஆனால் ரொம்ப நெருக்கம்,, இவங்களுக்கு இடையில் யாராலும் வர முடிந்ததில்லை,, இருவரும் எப்போதுமே தனி கட்சி தான்.. இருவரின் வீட்டிலும் தங்கள் மகள் போல நடத்தினர்..
இப்போ பி.காம் முடிச்சிட்டு இந்து காலேஜில் எம்.காம் 2nd year பன்னிட்டு இருக்காங்க.. காலெஜ் டைமிங் 9.30 to 3,
3 மணிக்கு மேல ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்ல பார்ட் டைம் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க tally trainer.. பாக்க சினிமா ஹீரோயின் மாதிரி இல்லனாலும் சீரியல் சைட் ஆக்டர் மாதிரி இருப்பாங்க👭👭)

இப்போ கதைக்குள்ள போவோம் வாங்க...

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now