திருமணக்காதல் 12

769 36 2
                                    

மாலை அனன் வீட்டில்...

வாம்மா ஸ்ரீ... - அனன் அம்மா
ம்ம்.. என்னம்மா அனன்யாவ பார்சல் பண்ண ரெடி பண்ணிட்டிங்க போல - ஸ்ரீ

ம்ம்.. ஆமாம்மா.. சரி அவள கொஞ்சம் ரெடி பண்ணும்மா - அனன் அம்மா
ஆ.. சரிங்கம்மா - ஸ்ரீ

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுதாரர்கள் வந்தனர்...

வாங்க.. வாங்க - அனன் அம்மா, அப்பா
அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்...

சிறுது நேரம் நலம் விசாரித்தவர்கள்... பொண்ண கூப்பிடுங்க - மாப்பிள்ளை வீட்டார்

ஸ்ரீ.. அனன்யாவை அழைத்து வந்தாள்..
எல்லாருக்கும் வணக்கம் சொல்லும்மா - அனன் அம்மா

வணக்கம் என்றாள்...
உன் பேர் என்னம்மா.. என்ன படிச்சிருக்க - மாப்பிள்ளை வீட்டார்....

அனன்யா.. எம்.காம் முடிச்சிருக்க - அனன்
ம்ம்.. சரிம்மா..

ஸ்ரீ உள்ள கூட்டிட்டு போம்மா - அனன் அம்மா

இருவரும் அறைக்குள் சென்றனர்

பொண்ணு நல்லா லட்சணமா இருக்கா.. எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா..
ம்ம்.. சொல்லுங்க.. - அனன் அப்பா

நாங்க சுத்தி வலச்சி பேச விரும்பல..
பையன் எம்.டெக் படிச்சிருக்கா.. மாசம் 45000 சம்பாதிக்குறா..
அது மட்டும் இல்லாம 2 சொந்த வீடு வேற இருக்கு...

நாங்க அதிகமா கேட்கல பொண்ணுக்கு ஒரு 20 சவரன் பையனுக்கு ஒரு 5 சவரன்

மொத்தம் 25 சவரன் போட்ருங்க...
பையனுக்கு ஒரு வண்டி குடுத்திடுங்க... என்ன சொல்றிங்க...

அய்யோ எங்களால இவ்ளோ முடியாதுங்க.. ஒரு 15 சவரன் தா போட முடியும்.. அதுக்கு மேல கஷ்டம்தா.. - அனன் அப்பா

பொண்ண எங்களுக்கு பிடிச்சி போச்சி.. சரி 22 சவரன் போடுங்க - மாப்பிள்ளை வீட்டார்

அறைக்குள் அமர்ந்து இதை கேட்டிருந்தவள்..
25 சவரன் என்ன நகை கடையா வெக்க போறாங்க - அனன்
ஷ்.. ச்சும்மா இரு டி - ஸ்ரீ

💓💓திருமணக்காதல்💓💓 (Completed)Where stories live. Discover now