"உதயா.." என்று தமிழ் கூப்பிட கண்டுகொள்ளாதவனாய் சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்துகொண்டு இருக்க..இவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

'ஏன் உதயன் கண்டுக்காத மாதிரி இருக்கான்'என்று அவள் யோசிக்க மனைவி தன்னை விட்டு பத்தடி நகர்ந்ததும் தமிழ்ச்செல்வியை பார்த்ததும் உதயன் "சாரி டி தமிழ்,என் மனைவிக்கு மத்த பொண்ணுங்க கிட்ட பேசுறது பிடிக்காது..சரியான சந்தேக மேர்விழி" என்று கூறிவிட்டு பணத்தை கடைக்காரரிடம் அளித்துவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தான்.

"சந்தேக பேர்வழி" என்ற வார்த்தை தமிழின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதற்கு நமக்கு கிடைத்த வாழ்க்கை எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை போலும் என்று நினைத்துவிட்டு பாதி ரோஸ்மில்க் குடிக்க மறந்தவளாய் மீண்டும் அதை குடித்து முடித்தாள்.

நேரம் கடந்து கொண்டு போனது தமிழ்ச்செல்வியை தொடர்புக்கொண்டான் அமுதன் "ஓய் பொண்டாட்டி என்னடி வீட்டுக்கு வந்துட்டியா"என்று கேட்க ஆட்டோ சத்தத்தில் அவளுடைய வார்த்தை சரியாக அவனிற்கு கேட்கவில்லை போதிலும் பத்ரமாக வா என்று கூறிவிட்டு போனை வைத்தான். எப்படியோ ஒருவழியாக வீடு வந்தடைந்தாள்.

வீட்டு வாசலில் அமர்ந்து கோதுமை புடைத்து கொண்டிருந்த மாமியார் ரங்கநாயகி "அம்மாடி தமிழ் போன வேலை முடிஞ்சிதா" என்று கேட்க

"ம்ம்ம் முடிஞ்சது அத்தை ஆமாம் நீங்க போகலையா"?

"எங்கத்தா"? "ஓ கைலாசம் சாவிற்கா ? இல்லை இல்லை போகவில்லை உங்கள் மாமாவை மட்டும் அனுப்பி வச்சிருக்கேன்.

"ம்ம்ம்" என்று தலையசைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள். தன் அறையினுள் எதர்ச்சையாக நுழைய அங்கு ஒரு குழந்தை போட்டோ ஃப்ரேம் போட்டு மாட்டிவைத்திருக்க அதை தொட்டு வருடினாள்.

"ஆங்...அத்தை..இந்த போட்டோ என்று கேட்க."அவரோ தான் தான் தூசி படைந்து கிடந்த அந்த போட்டோவை எடுத்து துடைத்து மாட்டியதாக கூற மீண்டும் அந்த போட்டோவை நோக்கி ஓர் நெருங்கிய பார்வையை செலுத்தினாள்.

காரிகையின் கனவு (Completed Novel)Where stories live. Discover now