மீரா அவர் கையை பிடித்து "அத்த சாரி அத்த என்ன மன்னிச்சிருங்க" என்று கூற

"இல்ல டா நான்தான் மன்னிப்பு கேட்கனும் நீ எந்த தப்பும் பன்னல என்ன மன்னிப்பியா டா" என்று விஜய் அம்மா கேட்க

"அய்யோ அத்த என்ன நீங்க என் கிட்ட போய் விடுங்க"

"விஜய் மன்னிச்சிரு பா" என்று விஜய் அப்பா கூற

"அய்யோ அப்பா என்ன பா மன்னிப்புன்னு பெரிய வார்தையெல்லாம் கேட்டுட்டு விடுங்க முடிஞ்சது முடிஞ்சிருச்சி" என்று கூற

"ஆமா முடிஞ்சது முடிஞ்சது தான் வாங்க எல்லோரும் கல்யாண வேலைய பார்க்கலாம்" என்று நிவி கூற

"ஆமா ஆமா வாங்க வாங்க நிறைய வேலை இருக்கு நாளைக்கு கல்யாணம் இன்னும் நிறைய வேலை இருக்கு" என்று அருண் கூற அனைவரும் விஜயிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல அங்கு விஜய் கார்த்தி மீரா மதி தியா மட்டும் இருக்க

மதி விஜயிடம் "சாரி அண்ணா உங்கள நா தப்பா பேசி இருக்க கூடாது எனக்கே தெரியும் எனக்கு மன்னிப்பு கிடையாது இருந்தும் கேட்கறன் என்ன மன்னிப்பிங்களா" என்று மதி கேட்க

"அந்த இடத்தில யார் இருந்தாலும் தப்பா தான் டா நினைச்சி இருப்பாங்க அதும் நீ மீரு மேல இருந்த பாசத்துல தான் அப்படி பேசன உன் பாசத்துக்கு முன்னாடி இது எல்லாம் தோத்து போய்ரும் டா நீ பேசன எதும் என் மனசுல இல்ல நீ மீரு மேல வச்சிருக்க பாசம் தான் தெரிஞ்சது"

மதியை தேடி வந்த அருண் "ஸ்ரீ போலாம் டா வேல இருக்கு அவன் எதும் நினைச்சிக்க மாட்டான் வா போலாம்" என்று மதியை அழைத்துச் சென்றான். வாசல் வரை சென்ற அருண் திரும்பி "மச்சான் மீராவ கூட்டின்னு வந்து வீட்ல விட்று" என்று விஜயிடம் கூறி விட்டு சென்று விட்டான். தியா அவள் அறைக்கு செல்ல போக அவளை தடுத்த விஜய்

"ரொம்ப தாங்க்ஸ் தியாமா நீ என்ன நம்பனதுக்கு" என்க

தியா அவனை முறைத்து கொண்டு "என் அண்ணன நா நம்பாம வேற யார் நம்புவாங்க போ போ போய் கல்யாணத்துக்கு ரெடி ஆகு" என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now