வரம் - 12

Start from the beginning
                                    

விஜய் திரும்பி என்ன என்பது போல் பார்க்க அவள் உட்கார் என்று கண் அசைக்க அவனும் பெட்டில் அமர்ந்தான். அவன் அமர்ந்ததும் அவன் மடியில் அமர்ந்து அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள். "மீரு என்ன டா" என்று விஜய் கேட்க

"என் கிட்ட இது வரைக்கும் எதாச்சி மறைச்சிற்கியா விஜி"

"இல்ல டா என் பர்ஸ்னல் எல்லாமே உனக்கு தெரியுமே டா என் அம்மா அப்பா தங்கை பிரண்ட்ஸ் எனக்கு ப்ரபோஸ் பன்னவங்கன்னு எல்லார பத்தியும் உனக்கு தெரியுமே டா இப்போ எதுக்கு இந்த கேள்வி கேட்கற"

"நீ எனக்கு இவ்வளோ உண்மையா இருக்கிரியா விஜி "

"என் மேல எதாச்சி சந்தேகமா டா ஏன் டா இப்படி எல்லாம் கேட்கற"

"ஐய்யோ விஜி உன் மேல சந்தேக பட்டா நா என்னையவே சந்தைக பட்ற மாறி "

"ம்ச்ச் அப்பறம் எதுக்கு டி இப்படி ஒலருற" என்று அவன் சற்று கடுப்புடன் கூற

"நா ஒரு ரகசியத்த மறச்சி வச்சிற்கன்"

"என்ன ரகசியம்"

"அது விஜி தப்பா நினைச்சிகாத நேரம் வரும் போது நானே சொல்றன் நா ஒரு விஷயம் மறைக்கிறன்னு தருண்க்கும் தெரியும் அவனும் எதும் என் கிட்ட கேட்கள உங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும் யார் கிட்டையும் சொல்லாதிங்க நேரம் வரும் போது நானே சொல்றன்"

"ஏன்டி ரகசியம்ன்னு சொல்லி Curiosity கிளப்பி விட்டுட்டு இப்ப நேரம் வரும் போது சொல்றன்னு சொல்லிட்டியே இதல தருண்க்கு தெரியுமாம் அவனையும் குழப்பி தான் விட்றுக்க? "

மீரா ஏதோ பேச வர அதற்குள் விஜய் அண்ணா என்று தருண் உள்ளே வர அவர்கள் இருந்த நிலை கண்டு திரும்பி நின்றுக் கொண்டான். விஜய் அவளை மெதுவாக தூக்கி பெட்டில் படுக்க வைத்து விட்டு தருணின் தோல் தொட்டான்.

"சின்ன கேப் கிடைச்சா கூட ரொமான்ஸ்ஸா "

"டேய் கரடி வா டா அவ ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான் விஜய்.

அங்கு அருணும் ஆரவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். "ஏன் டா இப்படி உட்காந்துட்டு இருகிங்க" என்று விஜய் கேட்க "இந்த மதி இருக்கா இல்ல மதி" என்று ஆரவ் கூற

"ஆமா அவளுக்கு என்ன" என்று விஜய் கேட்க "அவ தான் இன்னைக்கி சமைக்க போறாலாம்" என்று அருண் கூற "அதுக்கும் நீங்க இப்படி இருக்கவும் என்ன டா சம்பந்தம்" என்று விஜய் குழப்பமாக கேட்க "அண்ணா அவங்களுக்கு சமைக்கவே தெரியாது இன்னைக்கி தான் கிச்சன் பக்கமே போறாங்களாம் நம்ம கிட்ட தான் பஸ்ட் டெஸ்ட்" தருண் கூற விஜயும் அவர்களை போலவே அமர்ந்து விட்டான்.

"மதி மா இந்த விஷ பரிட்சை தேவயா டா நம்ப வெளில ஆர்டர் பன்னிக்கலாம்" என்று விஜய் கூற சமையல் அறையில் இருந்து டம்பலர் வந்து அவன் காலடியில் விழுந்தது.

அதை பார்த்து மற்ற மூவரும் சிரிக்க "நாங்க இத சொல்லி ஏற்கனவே வாங்கி கட்டிக்கிட்டோம்" என்று அருண் ஆரவ் தருண் மூவரும் கூறி சிரிக்க விஜய் இதற்க்கு மேல் பேசினால் தான் அவ்வளவுதான் என்று எண்ணி அமைதி காத்தான்.

சிறிது நேரத்திற்க்கு பிறகு சாப்பாடு ரெடி என்று மதி கூற நால்வரும் சாப்பிட மறுத்தனர். மதி அவர்களை மிரட்டி அமர வைத்து உணவு பரிமாறினாள். எல்லோரும் பாவமாக பார்க்க ஒருவன் மட்டும் மதியை ரசித்துக் கொண்டு இருந்தான். சாப்பாடு ஒரு அளவிற்க்கு நன்றாகவே இருந்ததால் அனைவரும் உண்டு விட்டனர். விஜய் மீராவை எழுப்பி உணவு கொடுத்து உறங்க வைத்தான்.

இரவு அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர். ஆரவ் விஜய் தருண் உறங்கி விட அருணிற்க்கு தூக்கம் வர வில்லை மதி செய்த ஒவ்வொன்றையும் நினைத்து சிரித்து கொண்டிருந்தான். "நீ எப்படி எனக்குள்ள வந்தன்னே தெரியல ஸ்ரீ நீ செய்ற ஒவ்வொரு விஷாயமும் ரசிக்க தான் தோனுது உன் கிட்ட உரிமை எடுத்துக்க தோனுது நீ எனக்காக பிறந்தவ ஸ்ரீ உன்ன கண்டிப்பா கண் கலங்காம பார்த்துபன் சீக்கிரம் உன் கிட்ட என் மனச சொல்லி உன்ன என் கூடவே வச்சிக்க போறன்"என்று அருண் சிந்திக்க அங்கு அவளோ

"எனக்கு ஏன் அருண் என் மாமா மாதிரி தெரியனும் இல்ல என் மாமா தவிற என் வாழ்கையில யார்க்கும் இடம் இல்ல நுழையவும் விட மாட்டன் இந்த அருண் நெனப்பு இனி வரவே கூடாது " என்று எண்ணி உறங்கி போனாள் மதி.

இனி இவர்கள் வாழ்வில் நடக்க இருப்பது விதியின் செயல்

வரம் தொடரும்.....

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now