வரம் - 10

Start from the beginning
                                    

"அந்த ஆக்ஸிடென்ட்ல எனக்கும் அப்பாக்கு மட்டும் மூச்சி இருந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தாங்க எனக்கு அடி கம்மி ஆனா அதிர்ச்சில வந்த மயக்கம் ஒரு வாரம் கலிச்சி கண் முழிச்சன் என் பக்கத்துல வக்கீல் அங்கிள் இருந்தார் அவர் தான் என்ன பார்த்துகிட்டார் அவர் சொல்லி தான் எனக்கு தொரியும் எல்லாரும் என்ன விட்டு போய்டாங்கன்னு  அவர் சொல்லியும் கேட்காம என்ன ஆசிரமத்தல விட சொன்னன் அதுக்கு அப்பறம் லைப் நல்லாதான் போய்ட்டு இருந்தது நா ஸ்கூல் முடிச்சி காலேஜ் போனன் பிரண்ட்ஸ் யாரும் இல்ல எனக்கும் தயக்கம் அதான் நா யார் கிட்டையும் பேசல ஒரு நாள் என்ன தேடி அத்த வந்தாங்க பாசமா பேசி என்ன அவங்க கூட கூட்டின்னு போனாங்க அங்க போன அப்பறம் தான் தெரிஞ்சது என்ன அவங்க சொத்துகாக அவங்க பையனுக்கு கல்யாணம் பன்ன போறாங்கன்னு அப்போ அவங்க கிட்ட இருந்து எங்க அத்த பொண்ணு தான் காப்பாத்துனா அவதான் வக்கீல் அங்கிள்க்கு கால் பன்னி வர வச்சி அனுப்பி விட்டா அப்பறம் அவங்கள போலிஸ் அரஸ்ட் பன்னிட்டு போய்டாங்க நா இங்க வந்து அப்பா அம்மா இருந்த வீட்ல வாழ ஆரமிச்சன்" என்று மீரா கூற

"சொத்துக்காக உன்ன கொல்லாம எதுக்கு கல்யாணம் பன்னி வைக்க பாக்கனும்" என்று ஆரவ் கேட்க

"என் அப்பா புத்திசாலி அண்ணா அவர்க்கு அவங்கள பத்தி தெரிஞ்சு இருக்கு அதனால என்ன கொலை பன்னாலும் பன்னுவாங்க தெரிஞ்சி எனக்கு கல்யாணம் ஆகி பொறக்க போற குழந்தைக்கு தான் சொத்து சொந்தம் அதுவும் அந்த குழந்த வளர்ந்து மேஜர் ஆகி சைன் பன்ன தான் உண்டு அது வரைக்கும் அதுக்கு கார்டியன் நான்னு உயில் எழுதி வச்சிட்டு நிம்மதியா போய்டாறு அதான் இப்படி" என்று மீரா கூறி கண் கலங்கினாள்.

"பாதி உண்மை தான் மீதி உண்மை யாருக்கும் தெரியகூடாது "என்று மீரா நினைக்க விதி நான் சொல்லுவேன் என்று தக்க நேரத்திற்காக காத்திருக்கிறது

"அப்பறம் எப்படி தருண் கூட ப்ரண்ட் ஆன " என்று விஜய் கேட்க

"எனக்கு அதல இருந்து வெளியே வரவே முடியல " என்று மீரா கூற தருண் இடைமறித்து நான் கூறுகிரேன் என்று கூறினான் "ஒன் வீக் அப்பறம் மீரா காலேஜ் வந்தா அவள யாரும் கண்டுக்கல அவளும் தான் ஆனா கிலாஸ்ல கவனம் இல்லாம ஏதோ மாதிரி இருந்தா லன்ச் டைம் வெளியே இருக்கர ஒரு மரத்துக்கு பின்னாடி உட்காந்து அழுத்துட்டு இருந்தா என்னன்னு ஒரு வார்த்த கேட்டன் மொத்த கதையையும் சொல்லி அழுதா ஆறுதல் சொல்லி அவள கூட்டின்னு போனன் அப்போ ஆரமிச்ச நட்பு" என்று முடித்தான்.

இப்ப எப்படி வந்தாங்க அவங்க என்று தருண் கேட்க "ஒரு வருஷத்துக்கு முன்னையே வெளில வந்துற்காங்க கொஞ்ச நாள் அமைதியா இருந்தா அவங்க திருந்திட்டாங்கன்னு விட்டுறுவாங்க அப்பறம் என்ன கடத்தலான்னு இருந்து இருக்காங்க" என்று மீரா கூற

இவர் பேசிக் கொண்டிருக்க ஒரு பெண் வேகமாக உள்ளே வந்து மீராவை அறைந்தாள். நால்வரும்   அதிர்ச்சியாக அருண் அப்பெண்ணை இழுத்து அவளை அறைந்தான் அதில் தடுமாறியவள் கீழே விழுந்தாள்.

வரம் தொடரும்.....

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now