54 மேலும் ஒரு திருப்பம்

385 27 4
                                    

54 மேலும் ஒரு திருப்பம்

"அவர் என்னோட ஃபிரண்டு இல்ல. என்னோட புருஷன்" என்றாள் தன்மயா.

ஆதித்தனும் நந்தினியும் மட்டுமல்ல, ருத்ரமூர்த்தியும் கூட அதிர்ச்சி அடைந்தார்கள்.

"புருஷனா? என்ன சொல்ற, தனு?" என்றார் நந்தினி பதற்றத்துடன்.

"ஆமா மா, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சோம். கல்யாணம் பண்ணிக்கட்டோம்..."

"நீ என்ன காரியம் செஞ்சுட்ட? ருத்ரா அங்கிள் அவர் இறந்துட்டதா சொல்றாரு... அப்படின்னா என்ன அர்த்தம்? அவர் சீக்கிரமே சாகப் போறாரு. நீ எதுக்காக சோழ நாட்டுக்கு போய், நம்ம காலத்தை சேராத இவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்றார் தவிப்புடன்.

"அம்மா, நான் அவர் கூட இருக்கிற வரைக்கும் அவர் சாக மாட்டார்" என்றாள் தன்மயா நம்பிக்கையுடன்.

"சினிமா டயலாக் பேசறத நிறுத்து, தனு" என்றார் அவரது அம்மா வெறுப்புடன்.

"நான் பேசுறது சினிமா டயலாக் இல்ல. உண்மை...!"

"நீ என்ன சொல்ற?"

"அவர் காவிரி கரையில சாக வேண்டியவர் அப்படிங்கறது உண்மை தான். ஆனா நான் அவரை அன்னைக்கு காப்பாத்திட்டேன்"

"நீ என்ன சொல்ற? அது எப்படி சாத்தியம்?" என்றார் ருத்ரமூர்த்தி

"ஆமாம், ஒரு ஆர்ச்சர் அவர் மேல அம்பு விட தயாரா இருந்ததை பார்த்து, நான் அவரை பிடிச்சி தள்ளிவிட்டு, அந்த அம்புல இருந்து அவரை காப்பாத்திட்டேன்"

"அப்படின்னா நீ ஒரு பேரலல் யுனிவர்சை உருவாக்கி இருக்க... ஏன்னா, வரலாறு படி அவர் சாக வேண்டியவர்" என்றார் ருத்ரமூர்த்தி நம்ப முடியாமல்

"ஆமாம், அந்த அம்பிலிருந்து நான் அவரை காப்பாத்தி ஒரு பெரலல் யுனிவர்சை கிரியேட் பண்ணிட்டேன். இப்போ, நான் அவர் கூட இருந்து தான் ஆகணும். நான் அவரை விட்டு வந்தா, அவருக்கு என்ன ஆகும்னு என்னால சொல்ல முடியல"

"நீ எதுக்காக அவரைப் பத்தி கவலைப்படுற, தனு?" என்றார் அவரது அம்மா.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now