21 தன்மயாவின் ஆட்டம்

309 23 4
                                    

21 தன்மயாவின் ஆட்டம்

"நான் தங்களை மணந்து கொள்கிறேன். என்ன கூறுகிறீர்?"

அதைக் கேட்டு தன்மயா அதிர்ச்சி அடைந்தாள் தான். தன்னை சமாளித்துக் கொண்டு நகத்தை கடித்தபடி கண்கள் பட படக்க வெட்கப்பட்டு,

"திருமணமா? தாம் என்னை மணந்து கொள்கிறீரா? உண்மையாகவா?" என்றாள் நம்ப முடியாத முகபாவத்துடன்.

"நிச்சயம் மணந்து கொள்கிறேன். தங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது"

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, பாரதிராஜாவின் படத்தில் வரும் கதாநாயகி போல், வெட்கப்பட்டு மெல்ல, தன் கரங்களை கீழேஇறக்கி அவனைப் பார்த்த அவள்,

"எனக்கு அவ்வளவு பெரிய கொடுப்பினை இருக்கிறதா?" என்று மீண்டும் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

"உனக்கு என்னை பிடித்திருக்கிறதா?" என்றான் மரியாதையை கைவிட்டு. அதை கவனித்த தன்மயா,

"யாருக்குத்தான் தங்களை பிடிக்காது?" என்றாள்.

"என்னை மணந்து கொள்ள நீ தயாரா?"

உதட்டை கடித்து ஆம் என்று தலையசைத்தாள் அவள். சட்டென்று அவள் முகபாவம் மாறியது,

"ஆனால், நான் தங்கள் மீது குற்றம் சுமத்தி இருக்கிறேனே... அரசர் என்ன கூறுவார்?" என்றாள் பதட்டத்துடன்.

"அது ஒன்றும் பெரிய காரியமல்ல. வாகைவேந்தன் வற்புறுத்தியதால் தான் அப்படி கூறியதாக கூறி விடு" என்றான் அவளது முக பாவத்தை கூர்ந்து கவனித்தவாறு.

"அரசர் என் மீது நம்பிக்கை கொள்வாரா?"

"நிச்சயம் நம்பிக்கை கொள்வார். நான் அவரை நம்ப வைக்கிறேன்"

"ஒருவேளை, அவர் என்னை நம்பா விட்டால்...?"

"அவரை நான் பார்த்துக் கொள்கிறேன்"

"ஆனால், எப்படி நான் குற்றத்தை சுமந்து கொண்டு தங்களை மணந்து கொள்ள முடியும்?"

"அதைப் பற்றி நீ கவலைப்படாதே. உன் மீது உள்ள குற்றத்தை நான் போக்குகிறேன்"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Wo Geschichten leben. Entdecke jetzt