8 இளவரசன் பற்றிய உண்மை

353 22 2
                                    

8 இளவரசன் பற்றிய உண்மை

அமுதனுடன் தன் பயணத்தை தொடர்ந்தாள் தன்மயா. பழமரங்கள் தந்த உயிர் வாசத்தை நுகர்ந்த படியும், அதன் நிழலின் அருமையை உணர்ந்த படியும்...!

செல்லும் வழியெல்லாம் அவர்களை பின்தொடர்ந்தது காவிரி. ஒவ்வொரு ஊரையும் சுற்றி வளைத்து காவிரி பாய்ந்து கொண்டிருந்த போதிலும், ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஐந்து குளங்கள் இருந்தன. அவற்றில் தண்ணீர் நிறைந்து தளும்பி கொண்டிருந்தது. அந்தக் குளங்களில், தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம் போன்ற வண்ணமயமான பூக்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்பவர் மனதை கொள்ளையடித்து கொண்டிருந்தன.
அந்த தண்ணீரின் வளம், அது சித்திரை மாதம் என்பதை அவளை நம்ப விடாமல் செய்தது.  சித்திரை மாத வெயிலின் கொடுமை தெரியாத அளவிற்கு, செழித்து வளர்ந்திருந்த மரங்களும், குளிர்ந்த நீர் நிலைகளும் சிலுசிலுவென்ற காற்றுக்கு காரணமாய் இருந்தன.

அப்பொழுது, அறுவடை செய்த நெல்லை, குடியானவர்கள் போரடித்துக் கொண்டும், தூற்றிக் கொண்டிருப்பதை கண்டாள். நெல்லும் வைக்கோலும் குவியல் குவியலாய் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புது நெல்லின் வாசம் தன்மயாவின் நாசிக்குள் புகுந்து, உள்ளிறங்கி, அவள் மனதை தொட்டது. புது நெல்லின் வாசம் குறித்து, அமரர் கல்கி, பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிட்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. அவரது வார்த்தைகள் எவ்வளவு உண்மை...! இந்த வாசம் எவ்வளவு பரவசத்தை தருகிறது...! மனிதர் ஒவ்வொன்றையும் அனுபவித்து எழுதியிருக்கிறார் என்று எண்ணினாள் தன்மயா...!

மெல்ல இருட்டத் துவங்கியது. முற்றிலும் வெளிச்சம் குறைந்துவிட்ட நிலையில், அவர்கள் அப்போது வந்தடைந்திருந்த சிற்றுரில் தேரை நிறுத்தினான் அமுதன்.

மிகப்பெரிய மரத்தடியில் சில பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கு வந்து நின்ற தேரை பார்த்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களிடம் வந்த ஒருவர்,

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now