6 தேர் பயணம்

325 23 3
                                    

6 தேர் பயணம்

தன்மயாவை தன் கூடாரத்திற்கு அழைத்து வந்தான் அமுதன். அவர்களுக்கு சில வீரர்கள், உணவும் தண்ணீரும் கொண்டு வந்தனர். கம்பளம் விரித்து, உணவு பரிமாற தாமரை இலைகளை வைத்தார்கள்.

"வாருங்கள், வந்து உணவு அருந்துங்கள்" என்றான் அமுதன்.

அமுதனும், அருகனும் அருகருகில் அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள் தன்மயா.

"இது தான் தாங்கள் வழக்கமாய் உணவு உண்ணும் நேரமா?" என்றாள்.

"இல்லை, நாங்கள் உணவு உண்ணும் வழக்கமான நேரத்திற்கு இன்னும் ஒரு முகூர்த்த காலம் உள்ளது"

(ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரம்)

"பிறகு ஏன் இவ்வளவு சீக்கிரமாய் உணவு உண்ணச் சொல்கிறீர்கள்?"

"நாம் இங்கிருந்து புறப்பட  வேண்டும் அல்லவா? அதற்காகத்தான்"

"ஓ... வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காது என்பதற்காக இங்கேயே சாப்பிட்டுவிட்டு புறப்பட சொல்கிறீர்களா?"

நமுட்டு புன்னகை பூத்த அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"எமது நாட்டில் உணவுக்கா பஞ்சம்? செல்லும் வழியெங்கும் அன்னசத்திரங்கள் ஏராளமாய் இருக்கிறது. அங்கு நமக்கு வேண்டிய உணவு கிடைக்கும்.  எம் நாட்டின் ஆயர்கள் கூட வந்தவரின் பசியாற்றுவர்(1)" என்றான் அமுதன்.

*ஆயர், அப்படின்னா மாடு மேய்க்கிறவங்க. இவர் என்னமோ அவங்களை மெக்டொனால்ட்ஸ் ஓனர் மாதிரி இல்ல பேசுறாரு?* என்று எண்ணிய அவள்,

"ஆயர்கள் எப்படி நமது பசியாற்றுவர்கள்?" என்றாள்.

"ஆயர்கள் மேச்சலுக்கு கிளம்பும்போது, தங்களுக்கு வேண்டிய உணவை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்படுவதில்லை. வழிப்போக்கர்களுக்கு கொடுப்பதற்காக கூடுதலாகவே உணவை கொண்டு செல்வர்"

அதை கேட்டு மலைத்துப் போனாள் அவள். மாடு மேய்க்கும் சாதாரண குடிமக்களுக்கு இப்படி ஒரு உயர் பண்பா!

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now