13 நட்பு

296 21 6
                                    

13 நட்பு

பொன்னியின் அறைக்கு வந்த தன்மயா, உடைமாற்றி தயாரானாள். அப்பொழுது அங்கு வந்தாள் பொன்னி. அவளை பார்த்து புன்னகைத்த தன்மயா,

"நாங்கள் புறப்படுகிறோம். தங்கள் வாழ்வையும், கணவனையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என்றாள் சிரித்தபடி.

"தாங்கள் மறுபடியும் எங்கள் ஊருக்கு வருவீர்களா, அக்கா?" என்றாள் பொன்னி ஆவலாக.

புன்னகை புரிந்த தன்மயா,

"எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், நான் தங்களை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்றாள்.

"என்னாலும், என்னாளும் உங்களை மறக்கவே முடியாது. தாங்கள் மட்டும் எங்கள் இல்லத்திற்கு வருகை புரியாமல் இருந்திருந்தால், நான் என் வாழ்வை இழந்திருப்பேன். படைத்தலைவரின் ஆணைப்படி வைத்தியர் வந்து, என் கணவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் குழந்தை பெறாமல் இருப்பதற்கான உண்மை காரணத்தையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் தங்களால் தான் இயன்றது" என்றாள் நன்றி பெருக்குடன்.

"தாம் தம் கணவரை உயிராய் நேசிக்கிறீர். தங்கள் மாமியாரின் நியாயமான எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு, அவர் மீது கோபம் கூட கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறீர்கள். தங்களை போன்ற நல்லவர்க்கு நிகழ்பவை அனைத்தும் நல்லதாகவே நிகழும். நிறைய பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு தாம்பத்தியம் என்றால் என்ன என்று கற்றுக் கொடுங்கள்" என்று சிரித்தாள் தன்மயா, பொன்னியை வெட்கப்பட செய்து.

தனது பொருட்களை பையில் அடுக்கி, அதை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்ப தயாரானாள் தன்மயா. அவர்கள் வெளியே வந்த போது,  அகவழகன் குடும்பத்தாரிடம், அமுதன் விடைபெற்றுக் கொண்டிருந்தான். தன்மயாவை நோக்கி விரைந்த நித்தியகல்யாணி அவளை அன்புடன் ஆரத் தழுவி கொண்டார்.

"தங்களுக்கு மிக்க நன்றி அம்மா. நாங்கள் தெரிந்து கொண்ட உண்மை, எங்களுக்கு தெரிவிக்க படாமல் போயிருந்தால், நாங்கள் மிகப்பெரிய பாவம் செய்த பாவிகளாகி இருப்போம்" வருத்தப்பட்டார் நித்தியகல்யாணி.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now