40 திட்டம்

338 27 2
                                    

40 திட்டம்

தனது அறையில் அன்பிற்கினியாள் வைத்துவிட்டு சென்ற நகைகளை பார்த்தாள் தன்மயா. நம்ப முடியாத அளவிற்கு திடீர் மாறுதல்களை காணும் அவளது வாழ்க்கையை எண்ணி அவள் வியந்தாள். அவள் புராதன சிறப்புமிக்க ஒரு இளவரசனை மணக்கப் போகிறாள். வரலாற்று பின்னணியை கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவள் அவள். வரலாறு குறித்த ஆர்வத்தை அவளது தாத்தா அவளது மனதில் விதைத்து, அது விருட்சமாய் வளரவும் காரணமாய் இருந்தார். அவளுக்கு கல்வெட்டு மொழியை பயிற்றுவித்தார். அதன் காரணமாகவே அவள் ஒரு பயணியாய் மாறினாள். சோழ தேசத்திற்கு வந்த அவள், திருமிழலையின் இளவரசனான அமுதனை சந்தித்தாள். அவன் இளவரசன் என்ற உண்மை அறியாமல், அவனை கிண்டலும் கேலியும் செய்தபடி அவனுடன் பயணப்பட்டாள். அந்த பயணம் தான் அவர்களுக்கு இடையில் நெருக்கம் ஏற்பட காரணமாய் அமைந்தது.

தன்மயாவின் எண்ணச் சங்கிலி அறுபட்டது, எழிலரசியுடன் பெண்கள் குழாம் உள்ளே வருவதை பார்த்து. கட்டிலை விட்டு எழுந்து நின்று அவர்களை பார்த்து புன்னகை புரிந்தாள் தன்மயா. அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளை அணைத்துக் கொண்டாள் எழிலரசி.

"நீங்கள் எனக்கு அண்ணியாய் வர இருப்பதை நினைக்கும் போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை"

"எங்கள் மகிழ்ச்சிக்கும் அளவில்லை" என்றார்கள் மற்ற பெண்கள்.

"நீங்கள் எங்கள் நாட்டை விட்டு சென்று விடுவீர்கள் என்று எண்ணிய பொழுதெல்லாம் எங்களுக்கு வெறுப்பாய் இருந்தது. தெய்வாதினமாக, நீங்கள் என் அண்ணனை மணக்க ஒப்புக் கொண்டு விட்டீர்கள். இனி தாம் இங்கிருந்து சென்று விடுவீர்கள் என்ற அச்சமே எனக்கு இல்லை"

"என்னைத் தவிர வேறு யாராவது உனக்கு அண்ணியாய் வாய்த்திருந்தால், நீ மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டாயா?" என்றாள் தன்மயா.

"நிச்சயம் இல்லை" என்றாள் எழிலரசி யோசிக்காமல்.

"உங்களைப் போல் மகிழ்வாகவும் இனிமையாகவும் யார் இருப்பார் கூறுங்கள்? உங்களைப் போல் அடுத்தவரை மகிழ்ச்சியூட்டும் பெண்ணை நாங்கள் பார்த்ததே இல்லை. இளவரசர், ஒரு இளவரசியை மணந்து கொண்டால், எங்களுக்கும் அவளுக்கும் எந்த வேறுபாடும் இருந்திருக்காது. நாங்கள் அனைவரும் ஒன்று போல் தான் இருந்திருப்போம். ஆனால் நீங்கள் எங்களைப் போல் அல்ல. முற்றிலும் வேறுபட்டவர். எந்த வேறுபாட்டையும் தங்கள் செயலில் காட்டாதவர். நீங்கள் மற்றவரைப் போல் அல்லாமல் தோழமை மிக்க அண்ணியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Место, где живут истории. Откройте их для себя