17 நேர்பட...

412 27 4
                                    

17 நேர்பட...

தன் அம்மாவை சந்தித்த பிறகு தன் தந்தையை காணச் சென்றான் அமுதன். அவர் இன்னும் குருநாதருடன் இருக்கவே, தான் வந்த செய்தியை அரசரிடம் அறிவிக்குமாறு காவலாளிகளிடம் கூறிவிட்டு, அவரை சந்திக்காமலேயே திரும்பி வந்தான் அமுதன், அப்படி எதைப் பற்றித்தான் இவ்வளவு நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணியபடி.

தன்மயா இன்னும் அந்த பலகணியின் அருகில் தான் நின்று கொண்டிருந்தாள். அவள் எதையோ ஆழமாய் சிந்திப்பது தெரிந்தது. அந்த இடத்தின் அழகிலும், அதன் ரம்யமான சூழலிலும் தன் மனதை பறிகொடுத்து, அடிமையாகி விடுவோமோ என்ற பயம் அவள் மனதில் எழுந்தது.

*வேணா தன்மயா... மதங்கனை பத்தி அரசர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண மட்டும் தான் நீ இங்க வந்திருக்க. அந்த வேலையை செஞ்சுட்டு ஒழுங்கா இங்கிருந்து கிளம்பி போயிடு. (சில நொடி திகைத்த அவள்) நான் ஒரு டைம் ட்ராவலர். நான் இங்கிருந்து போனதுக்கு பிறகு என்ன நடக்கும்? டைம் டிராவல் பண்றவங்களால எதையுமே மாத்த முடியாதுன்னு தாத்தா எழுதி இருந்தாரே...! அது பிறப்புக்கும் இறப்புக்கும் மட்டும் தான் பொருந்துமா? இல்ல, அது எல்லாத்துக்குமே பொருந்துமா? நான் நிகழ்காலத்துக்கு போனா என்னவாகும்? அமுதன் என்னை மறந்துடுவாரா? மறுபடியும் நான் இங்க வந்தா, அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமா? இல்ல, வேற ஒரு இணை பிரபஞ்சம் உருவாகுமா? அவள் மனதில் பலவிதமான கேள்விகள் எழுந்தது.

அப்பொழுது அவள் காதின் அருகில் யாரோ விரல்களை சொடுக்க, அவள் திடுக்கிட்டாள். அங்கு புன்னகையுடன் நின்றிருந்தான் அமுதன்.

"அப்படி என்ன ஆழ்ந்த யோசனை?"

"எனது நாட்டிற்கு திரும்பிச் செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்"

அதைக் கேட்ட அடுத்த கணம் அவனது முகம் மாறியது.

"உன் நாட்டுக்கா? என்ன அவசரம்?" என்றான்.

"நான் என் நாட்டில் இருந்து கிளம்பி வெகு நாட்கள் ஆகிவிட்டது"

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Opowieści tętniące życiem. Odkryj je teraz