37 ஆயுள் ரேகை

273 25 2
                                    

37 ஆயுள் ரேகை

"நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் அவன் மாய்க்கப்பட வேண்டும் என்பது விதி...! இந்நேரம் அவனுடைய வாழ்நாள் முடிந்திருக்க வேண்டும். அவன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை"

ஒப்பிலாசேயோனும் அன்பிற்கினியாளும், அதிர்ச்சியாலும் குழப்பத்தாலும் திகைத்து நின்றார்கள்.

"அமுதன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான். நலமுடன் இருக்கிறான்" என்றார் அரசர்.

"நிச்சயம் இருக்க முடியாது. அது எப்படி சாத்தியம்? விதியை எப்படி மாற்ற இயலும்?"

"இதற்கு என்ன கூறுவது என்று எனக்கு புரியவில்லை முனிவரே. அமுதன் உயிரோடு இருக்கிறான். அது தான் உண்மை. சற்று நேரத்தில் அவன் இங்கு வருவான். அப்பொழுது தாமே அவனை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்" என்றார் அரசர்.

"நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் அவன் தாக்கப்பட இருந்தது உண்மை தான். ஆனால் ஒரு பெண் அவனை அதிலிருந்து காத்து விட்டாள்" என்றார் அன்பிற்கினியாள்.

"பெண்ணா? யார் அவள்?"

"அவள் அயல் நாட்டைச் சேர்ந்த பெண். நம் நாட்டைக் காண வந்திருக்கிறாள்"

"எங்கே அவள்? அவள் இங்கிருந்து சென்று விட்டாளா?"

"இல்லை. அவள் நம் நாட்டில் தான் அரசு விருந்தாளியாக தங்கி இருக்கிறாள். அவளை அமுதன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளான்"

"அவள் குறித்து நான் தங்களிடம் மிக முக்கியமாய் பேச எண்ணி இருந்தேன்" என்றார் அரசர்.

மெய்தீர்த்தர் யோசனையில் ஆழ்ந்தார்.

"தயவு செய்து உள்ளே வாருங்கள் முனிவரே" என்று அவரை தனது அறைக்கு  அழைத்துச் சென்றனர்.

அரசரின் மாளிகைக்கு வந்த முனிவர், ஆசனத்தில் அமர்ந்து கொண்டு,

"என்ன நடந்தது என்று தெளிவாக என்னிடம் விளக்கி கூறுங்கள்" என்றார்.

"நம் நாட்டின் தென்படை தளத்தில் அமுதன் தங்கியிருந்தான். அங்கு,  ஒரு பெண்ணை கவர்ந்து செல்ல ஒருவன் முயன்றிருக்கிறான். அவனிடமிருந்து அந்த பெண்ணை அந்த அயல் நாட்டினள் காப்பாற்றிய போது தான் அமுதன் அவளை சந்தித்தான். அந்தப் பெண்ணிடம் நடந்தது பற்றி அமுதன் விசாரித்த போது, அந்த சம்பவத்தை அரங்கேற்றியது மதங்கன் என்ற உண்மையை கூறி இருக்கிறாள். ஆனால் அவள் நமது தலைநகருக்கு வந்து அரசரிடம் அது பற்றி கூற அச்சமுற்று இருக்கிறாள். அவளுக்கு பதிலாக, அதை செய்ய அந்த அயல் நாட்டுப் பெண் துணிந்திருக்கிறாள். அதனால் அவளை தலைநகருக்கு அழைத்து வந்தான் அமுதன். நகருக்கு வரும் வழியில் அமுதனை கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. அவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அவன் மீது நஞ்சு தோய்க்கபட்ட அம்பு எய்யப்பட்டது. அப்பொழுது தான் அந்தப் பெண் அவனை காத்திருக்கிறாள்" என்றார் அன்பிற்கினியள்.

காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)Where stories live. Discover now