காரிகையின் கனவு (Completed No...

By annaadarsh

15K 632 79

இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் ப... More

1
2
3
4
5
6
7
8
9
10
11
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29

12

394 19 0
By annaadarsh

எதிர்முனையில் அமுதனின் நெருங்கிய உறவினர் ஒருவர் "டேய் அமுதா நம்ப கைலாசம் அண்ணே இறந்துட்டாரு டா வா டா சீக்கிரம்" என்று கூறிவிட்டு போனை துண்டிக்க அவனோ என்ன செய்வதறியாது தமிழ்ச்செல்வியை இறக்கிவிட்டு அவளை ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்துவிட்டு இழவு வீட்டிற்கு விரைந்தான்.

சேனலுக்கு வந்தடைந்தாள் நம்முடைய கதாநாயகி தமிழ்ச்செல்வி அவளை பார்த்ததும் இன்முகத்துடன் வரவேற்பரையில் வரவேற்று சேனல் ப்ரொடக்ஷன் மேனஜரை சந்திக்கும்படி அனுப்பி வைக்க மேனஜர் அறைக்கதவை தட்டினாள்.

"எக்ஸ்கியூஸ் மீ" உள்ள வரலாமா என்றவாறு மேனஜரை பார்க்க அவரோ அவளை வரவேற்று நாற்காலியில் அமரச்சொன்னார்.
"அப்றம் மேடம் கதை எழுதுற பயணம் எல்லாம் எப்படி போகுது? உங்கள் கணவர் தான் உங்களுடைய மிகப்பெரிய வாசகர் போல..."என்று புன்னகையிக்க அவளோ புகழ்ச்சியின் வெட்கத்தில் தலையை கீழே சாய்த்துக்கொண்டாள்.

"மேடம் சீரியலுக்கு வசனம் எழுதுவதற்கு தான் உங்களை அழைச்சோம்..இனி இரண்டு நாள் ஒருமுறை சேனலுக்கு வரனும் வந்து வசனங்கள் எழுதி தந்துவிட்டு போகனும். டைரக்டர் எப்படி எதிர்பாக்கிறாரோ அதுபடி உங்கள் ரைட்டிங் இருக்கனும். ஏதோ கதை எழுதுற மாதிரி எல்லாம் சீரியலுக்கு ஸ்க்ரிப்ட் எழுதக்கூடாது. என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்.. சரி சரி மத்தது எல்லாம் டைரக்டர் விலாவாரியாக சொல்லுவார். இப்ப நீங்க கிளம்பலாம்" என்று கூறி அனுப்பிவைக்க அவளுக்கு அந்த சேனலில் இருந்து வெளியே வரும்போது ஏதோ சாதித்தது போல் இருந்தது.

வெளியே வந்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை அருகில் இருந்த ஜூஸ்கடையினுள் வந்து ஒரு ரோஸ்மில்க் ஆர்டர் செய்து அமர்ந்தாள். எப்போதெல்லாம் மனது சந்தோஷமாக உள்ளதோ அப்போதெல்லாம் எதாவது குளிச்சியாக சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சின்ன வயதிலிருந்தே தமிழுக்கு உண்டு. ரோஸ்மில்க் உரிந்துக்கொண்டிருக்க எதிரே உதயன் தற்செயலாக தன் மனைவியுடன் அந்த கடைக்கு வந்தான்...

"உதயா.." என்று தமிழ் கூப்பிட கண்டுகொள்ளாதவனாய் சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்துகொண்டு இருக்க..இவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

'ஏன் உதயன் கண்டுக்காத மாதிரி இருக்கான்'என்று அவள் யோசிக்க மனைவி தன்னை விட்டு பத்தடி நகர்ந்ததும் தமிழ்ச்செல்வியை பார்த்ததும் உதயன் "சாரி டி தமிழ்,என் மனைவிக்கு மத்த பொண்ணுங்க கிட்ட பேசுறது பிடிக்காது..சரியான சந்தேக மேர்விழி" என்று கூறிவிட்டு பணத்தை கடைக்காரரிடம் அளித்துவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தான்.

"சந்தேக பேர்வழி" என்ற வார்த்தை தமிழின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதற்கு நமக்கு கிடைத்த வாழ்க்கை எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை போலும் என்று நினைத்துவிட்டு பாதி ரோஸ்மில்க் குடிக்க மறந்தவளாய் மீண்டும் அதை குடித்து முடித்தாள்.

நேரம் கடந்து கொண்டு போனது தமிழ்ச்செல்வியை தொடர்புக்கொண்டான் அமுதன் "ஓய் பொண்டாட்டி என்னடி வீட்டுக்கு வந்துட்டியா"என்று கேட்க ஆட்டோ சத்தத்தில் அவளுடைய வார்த்தை சரியாக அவனிற்கு கேட்கவில்லை போதிலும் பத்ரமாக வா என்று கூறிவிட்டு போனை வைத்தான். எப்படியோ ஒருவழியாக வீடு வந்தடைந்தாள்.

வீட்டு வாசலில் அமர்ந்து கோதுமை புடைத்து கொண்டிருந்த மாமியார் ரங்கநாயகி "அம்மாடி தமிழ் போன வேலை முடிஞ்சிதா" என்று கேட்க

"ம்ம்ம் முடிஞ்சது அத்தை ஆமாம் நீங்க போகலையா"?

"எங்கத்தா"? "ஓ கைலாசம் சாவிற்கா ? இல்லை இல்லை போகவில்லை உங்கள் மாமாவை மட்டும் அனுப்பி வச்சிருக்கேன்.

"ம்ம்ம்" என்று தலையசைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள். தன் அறையினுள் எதர்ச்சையாக நுழைய அங்கு ஒரு குழந்தை போட்டோ ஃப்ரேம் போட்டு மாட்டிவைத்திருக்க அதை தொட்டு வருடினாள்.

"ஆங்...அத்தை..இந்த போட்டோ என்று கேட்க."அவரோ தான் தான் தூசி படைந்து கிடந்த அந்த போட்டோவை எடுத்து துடைத்து மாட்டியதாக கூற மீண்டும் அந்த போட்டோவை நோக்கி ஓர் நெருங்கிய பார்வையை செலுத்தினாள்.

"என்னத்தா பார்க்கிற கூடிய சீக்கிரம் உனக்கும் இப்படி பிறக்கும். தினமும் இந்த குழந்தை முகத்தில் விழி நல்லது அதாவது ஆங்கிலத்தில் ஏதோ சொல்வீங்களே பா...ஸி..ஆங் பாஸிட்டிவ் வைப்ரேஷன்.. அது உனக்கும் கிடைக்கும்" என்று தன் மருமகளின் கண்ணத்தை கிள்ளி முத்தம் கொடுத்தாள்.

.....
இப்படியே ஒருமாதம் கழிந்தது. தமிழ்ச்செல்வியை மருத்துவமனை அழைத்து சென்றான் எம்ப்ரியோ டிரான்ஸ்வர் செய்ய.. எல்லாம் பழகிவிட்டது என்ற மிடுக்கில் தமிழ்ச்செல்வி செவிலியர் உதவியோடு பேஷண்ட் டேபிளில் படுத்துக்கொண்டு மருத்துவர் பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் பார்த்துக்கொண்டே மனதில் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் எம்ரியாலகிஸ்ட் அவளிடம் "பயப்படாதிங்க ஆல் தி பெஸ்ட் இனி நல்லா ஓய்வு எடுக்கனும்" என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். அமுதனின் துணையோடு காரில் ஏறிச்சென்றாள் வீட்டிற்கு.

ரங்கநாயகி "அம்மாடி இனி எது வேண்டும்னாலும் என்கிட்ட தான் கேக்கனும். கொஞ்ச நாளைக்கு ஓடியாடி எதுவும் செய்யாத கண்ணு"என்று கூற சரிங்க அத்தை என்றபடி அவளுடைய எண்ணம் மகப்பேறு நோக்கி சென்றது.

அமுதன் அவள் கைகளை பற்றி நெற்றியில் முத்தம் பதித்தான் "அம்முலு... சீக்கிரமே நம்ப கனவு நிறைவேற போகுது ஓகேவா எதுக்கும் கவலைபடாத" என்று கூற அவன் தோளில் சாய்ந்தவள் " எனக்கு குழந்தை வேண்டும் அப்படிங்கிறத விட உங்களுக்காக கண்டிப்பாக எனக்கு பிறக்கனும்" என்று மெல்லிய குரலில் தனது ஆசையை கூற ....

"டேய் அமுதா போய் பழம் எல்லாம் வாங்கிட்டு வா. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனால் மட்டும் பத்தாது கண்ணு"என்று ரங்கநாயகி புன்னகையிக்க அமுதன் தன் தாயிடம் "சரி மா நான் போய் வாங்கிட்டு வரேன்" என்று கூறி விடைபெற்று சென்றான்.

'இந்த வயதில் கூட அமுதனை ஆசையா கண்ணுனு கூப்பிட ஆசை எனக்கு இருக்கும் போது பாவம் தமிழுக்கு ஒரு குழந்தையை தவழ விட எவ்வளவு ஆசை இருக்கும். ஆண்டவா நீ தான் காப்பாத்தனும்' என்று மனதளவில் வேண்டிக்கொண்டாள்.

இதற்கிடையில் தான் கலையரசியிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. சொந்த தங்கையின் நிச்சயதார்த்ததிற்கு கூட என்னால் போக இயலவில்லை என்று வருந்தினாள் தமிழ்ச்செல்வி.

"மகப்பேறு என்பதே ஒரு தாயின் தியாகம்"

இதை தமிழ்ச்செல்வி புரிந்து கொண்டாள். எனினும் அவளுடைய சிந்தனை அனைத்தும் குழந்தையை நோக்கி சென்றது.
"ஒரு சிறிய பிசுறு போல் என் வயிற்றில் இருக்கும் என் ரத்தமே விரைவில் என் மடியில் தவழ்வாயாக" என்று தன் வயிற்றை தொட்டு ஸ்பரிசித்தாள்.

தொடரும்

Continue Reading

You'll Also Like

424K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...
101K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom
60.3K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...