சிருவாடு

By ThamizhThen

2.7K 707 796

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்ச... More

ஸ்பரிசம்
பேருந்து பிரிவு
காத்திருந்தேன்
துளி காதல்💗
ஒரு நொடி
முதல் முத்தம்
மௌன மொழியாள்...
கொலைகாரக் கொலுசு​
இடம் ஒதுக்கு
சொல்லுறத கேளுபுள்ள
விரைந்திடு...
நெடுவாசல்
உனக்கிணை நீயே!!😍😍
கானல் நீராய்...
சிறை வாசமும் சுகம் தான்
அவன் நிலா
சுகம்...
மரணித்த மணித்துளிகள்
🌈🌈வானவில்லடா நீ எனக்கு 🌈🌈
நிழல்களின் உளறல்
நதிகளும் பெண்களும்
உன்னோடு தான்
உன்னை பிடிக்கும் 😍
மலர் அவள்
நீ புரட்டியப் பக்கங்கள்
வலி💔
அவள் அறிந்திருக்கவில்லை💔
வளையின் வலையில்
பெண் வேண்டும் என்பார்கள்...
அவள் அகராதி
வாழ்க்கைப் பயணம்
மீண்டும் மீண்டும்

சிருவாடு

348 57 71
By ThamizhThen

சிறுக சிறுக சில்லரையும் ரூபாயுமா

எங்காத்தா பிடிச்சு வச்ச

சிருவாட்டப் போலத் தான்


வீதி வீதியா அலைஞ்சு திரியுறேன்- அவ

இருந்து வாழ்ந்த சுவடெல்லாம் சேகரிச்சு

நூறு முறை எண்ணிப்பார்க்க..

பள்ளிக்கூடம் போய்- வீடு

வந்து சேரும்​ முன்ன, ஆத்தா

நீ வச்ச கருவாட்டுக் குழம்பு மணம்

கம்மாங் கரைத் தாண்டி

என்னக்​ கைப்பிடிச்சு

இழுக்குமத்தா...

சேலைத் தலைப்பில்- ஆத்தா

நீ முடிஞ்சு வைச்ச சில்லறையைப்

போலத் தான்,

ஜம்முனு உட்கார்ந்திருக்க

என் உசுருக்கு

உச்சியில ...

அங்கிட்டும் இங்கிட்டுமா நான்

ஆட்டி விளையாண்ட

உன் தண்டட்டி

இப்ப கதை பேசுது

என் கையில

கிடந்து..

இத்தனையும்

பொசுக்கு பொசுக்குனு

வந்து போகுது கண்ணு முன்ன....

ஆனா இரத்தமும் சதையுமா

உன்ன கட்டிப்பிடிச்சு உரவாட

ஆத்தா உசுரோட நீ இல்லையே​...

உன்ன உரிமைக்

கொண்டாட எனக்கும்

இப்ப நாதி இல்லையே....

ஆத்தா!!

எனக்கு உன்னவிட்டா
வேறு நாதி இல்லையே!!
நாதி இல்லையே!!

---------------------------------------------------------------------------------------

பொறுமையா வந்து வாசிச்சதுக்கு ரொம்ப thanks... இது தான் wattpadல என்னுடைய முதல் பதிவு... so பிடிச்சிருக்கா பிடிக்கலயா, நிரை குறை நு எதுவா இருந்தாலும் comment section ல சொல்லுங்க please.. na improve pannikka helpful aa irukum... 


Continue Reading

You'll Also Like

6K 152 19
என் தேடல்கள் என் எண்ணங்கள் என்னவனுக்கான கிறுக்கல்கள்.....
54 7 1
கவிதை
1.5K 59 3
TAMIL POEMS LIFE LOVE WORLD SUCCESS FAILURE POETRY WORKS..! SUMITHRAILANGO.