வா.. வா... என் அன்பே...

De kanidev86

204K 5.4K 1.8K

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவ... Mai multe

வா.. வா... என் அன்பே
author notes
வா.. வா.. என் அன்பே - 1
அன்பே - 2
அன்பே -3
அன்பே - 4
அன்பே - 5
அன்பே - 6
அன்பே - 7
வா.. வா.. என் அன்பே - 8
அன்பே - 9
அன்பே - 10
அன்பே - 11
அன்பே - 12
அன்பே - 13
அன்பே -14
அன்பே - 15
வா.. வா.. என் அன்பே - 16
அன்பே - 17
வா.. வா‌‌.. என் அன்பே - 18
வா.. வா.. என் அன்பே - 19
வா.. வா.. என் அன்பே - 20
வா..வா.. என் அன்பே -21
author's note
வா.. வா.. என் அன்பே - 22
வா.‌ வா.‌ என் அன்பே - 23
வா.. வா.. என் அன்பே - 24
வா.. வா.. என் அன்பே - 25
வா.. வா.. என் அன்பே - 26
வா.. வா.. என் அன்பே - 27
வா.. வா.. என் அன்பே - 28
வா.. வா.. என் அன்பே - 29
வா..வா.‌. என் அன்பே - 30
வா.. வா.. என் அன்பே - 31
author note
வா.. வா.. என் அன்பே - 32
வா..வா.. என் அன்பே - 33
வா.. வா.. என் அன்பே - 34
வா.. வா.‌. என் அன்பே - 35
வா..வா.. என் அன்பே - 36
வா.. வா.. என் அன்பே - 37
வா.. வா.. என் அன்பே - 38
வா.. வா.. என் அன்பே - 39
வா.. வா.. என் அன்பே - 40
வா.. வா.. என் அன்பே - 41
வா.. வா... என் அன்பே - 42
வா.. வா.. என் அன்பே - 43
author note
வா.. வா.. என் அன்பே - 44
வா.. வா.. என் அன்பே - 45
வா.. வா.. என் அன்பே - 46
வா.. வா.‌. என் அன்பே - 47
வா.. வா.. என் அன்பே - 48
வா..வா.. என் அன்பே - 49
வா.. வா.. என் அன்பே - 50
வா.. வா.. என் அன்பே - 51
வா.. வா.. என் அன்பே - 52
வா.. வா.. என் அன்பே - 53
வா.. வா.. என் அன்பே - 54
வா..வா.. என் அன்பே - 55
வா.. வா.. என் அன்பே - 56
வா.. வா.. என் அன்பே - 57
வா.. வா.. என் அன்பே - 58
வா.. வா.. என் அன்பே - 59
வா.. வா.. என் அன்பே - 60
வா.. வா.. என் அன்பே - 61
வா வா என் அன்பே - 62
வா.. வா.‌‌. என் அன்பே - 63
author notes
வா.. வா.. என் அன்பே - 64
வா.. வா.. என் அன்பே - 65
வா.. வா.. என் அன்பே - 66
வா.. வா.. என் அன்பே - 67
வா.. வா.. என் அன்பே - 68
வா.. வா.. என் அன்பே - 69
வா.. வா.. என் அன்பே - 70
வா.. வா.. என் அன்பே - 71
வா.. வா.‌. என் அன்பே - 72
வா.. வா.. என் அன்பே - 73
வா.. வா.. என் அன்பே - 74
வா.‌. வா.. என் அன்பே - 75
வா.. வா.. என் அன்பே- 76
வா.‌. வா.. என் அன்பே - 77
வா.. வா.. என் அன்பே - 78
வா.‌. வா.. என் அன்பே - 79
வா.. வா.. என் அன்பே - 80
வா.. வா.. என் அன்பே - 81
வா.‌ வா‌‌.. என் அன்பே - 82
வா.. வா.. என் அன்பே - 83
வா.. வா.. என் அன்பே - 84
வா.. வா.. என் அன்பே - 85
வா.. வா.. என் அன்பே - 86
வா.. வா.. என் அன்பே - 87
வா.. வா.. என் அன்பே - 88
வா.. வா.. என் அன்பே - 89
happy diwali
வா.‌. வா.‌ என் அன்பே - 90
வா.. வா.. என் அன்பே - 91
வா.. வா.. என் அன்பே - 92
வா.. வா.. என் அன்பே - 93
வா.. வா.. என் அன்பே - 94
வா.. வா.. என் அன்பே - 95
வா... வா.. என் அன்பே - 96
வா.. வா.. என் அன்பே - 97
வா.. வா.. என் அன்பே - 98
வா.. வா.. என் அன்பே - 99
வா.. வா.. என் அன்பே - 100
வா.. வா.. என் அன்பே - 101
வா.. வா.. என் அன்பே - 102
வா.. வா.. என் அன்பே - 103
வா.. வா.. என் அன்பே - 104
வா.. வா.. என் அன்பே - 105
வா.. வா.. என் அன்பே - 106
வா.. வா என் அன்பே - 107
வா.. வா.. என் அன்பே - 108
வா.. வா என் அன்பே - 109
வா.. வா.. என் அன்பே - 110
111
வா.. வா.. என் அன்பே - 112
வா.. வா.. என் அன்பே - 113
வா.. வா.. என் அன்பே - 114
வா.. வா.. என் அன்பே - 115
வா.. வா.. என் அன்பே - 116
வா.. வா.. என் அன்பே - 118
வா.. வா.. என் அன்பே -119
வா.. வா.. என் அன்பே - 120
வா.. வா.. என் அன்பே - 121
வா.. வா.. என் அன்பே - 122
வா.. வா.. என் அன்பே - 123
124

வா.. வா.. என் அன்பே - 117

1K 39 5
De kanidev86

பகுதி - 117

கடந்த சில நாட்களாக தாமரையின் கோபம் , சரண் மித்ரனின் இதயத்தில் ஊடுருவி வலியை ஏற்படச் செய்து இருந்தாலும் , கர்ப்பிணி பெண்களுக்குஃ எ இயல்பாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் , அவளது சினமும் எக்ஸ்ட்ரீம் லெவலில் இருப்பதாக நினைத்தே மௌனித்து , குழந்தையையும் அவளையும் பாதுகாத்துக் கொண்டான் என்றே கூற வேண்டும் .

ஆனால் , இப்பொழுது அவளது கண்களில் தோன்றி மறைந்த மின்னலை கண்ட பிறகோ , அவள் வயிற்றில் குழந்தையுடன் இருப்பதால் மட்டுமே மான்சியின் வீடு என்றும் பாராமல் வந்து இருப்பதாக நினைத்து வருந்தி இருக்கிறாள் என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடிந்தது . ஆனால் , ஏன் மீண்டும் இந்த விலகல்.. அதுவும் தன்னிடம் ஏன் அவளது உணர்வுகளை காண்பிக்காமல் அவசரமாக வெளியேற வேண்டும் என்ற சிந்தனையால் தன்னைத் தானே குழப்பிக் கொண்டாலும் , "ரொம்ப படுத்துற டீ..", என்று புலம்பியவனாக , பெருமூச்சை வெளியேற்றி , தற்காலிகமாக அதனை ஒற்றி வைத்தவன்.. அறையில் இருந்து வெளியே செல்ல நினைக்க , அவளது அலைபேசியின் அலறல் சத்தம் .

' இவளுக்கு எதுக்கு மொபைல்ன்னே தெரியல..', என்று வாய்விட்டே புலம்பியவாறே , படுக்கையில் இருந்ததை எடுத்தவன்.. தன்னிச்சையாக ,  கண்கள் அதன் திரையில் பதிக்க.. சரணின் தாடை இறுக்கத்திற்கு தாவி , குழப்பம் தொலைந்து கடுகடுத்து போனதாய் .

லிஃப்ட்டிற்குள் இருந்து கீழ் இறங்கி வந்தவளோ மிகுந்த கவனத்துடனே , பாதத்திற்கு நோகுமோ அல்லது பூமிக்கு நோகுமோ என்று எண்ணும் அளவிற்கு மெதுவாகவே நடந்து சமையல் அறைக்குள் நுழைந்த மறுநிமிடமே ,

" வாடா ம்மா.. இவ்வளவு லேட்டா எழுந்திரிக்கலாமா..", என்று அவளை செல்லமாக கடிந்த சாவித்ரி , அவளுக்காகவே ஒரு நாற்காலி அங்கு  போடப்பட்டு இருக்க.. அதில் மெதுவாகவே அமர வைத்தவராக , "இந்தா இந்த டீயை குடி..", என்று அமர்த்தளாகவே கண்டிக்கவும் , சிறு புன்னகையுடன் பெற்றுக் கொண்டவள் , மெதுவாக பருகிக் கொண்டு இருக்கும் பொழுதே ,

சரண் தன் அறையின் கதவில் , அத்தனை ஆத்திரத்தையும் காண்பித்தவனாக , தன் வேக நடையால் கீழ் இறங்கி இருந்தான் .  அந்த இடத்தையே நிறைத்த அவளது அலைபேசியின் சத்தம் மிக அருகே அவளுக்கும் கேட்க , தாமரையும் வேகமாக திரும்பிய போது , சமையல் அறையின் வாயிலில் நின்று இருந்தவனின் முகம் பெரும் இறுக்கத்தில் இருந்தாலும்.. மனைவியின் கரத்தை பிடித்து , அழைப்பை ஏற்காத நிலையிலேயே  கொடுக்க , அழைப்பிற்கு சொந்தகாரர் யார் என்று திரையை கண்டவளுக்கோ , விழிகள் இரண்டும் தெறித்து விழும் அளவிற்கு விரிந்து , மிக அவசரமாய் , நன்கு உற்று நோக்கியவளாக அவன் முகம் காண , பற்களின் இறுக்கம் தாடையில் காண்பித்து , துடைத்த முகத்துடன் , "ம்..", என்ற உறுமலையும் மறக்காமல் வெளியிட்டவனாக வேகமாக அங்கு இருந்து நகர்ந்துவிட்டான் . ' இந்தா பிடி..', என்ற உறுமலா அல்ல ' பேசு‌..', என்ற தோரணையா என்று குழம்பு அளவிற்கே , அவன் உடல்மொழி இருந்ததாய் .

ஒருமுறை இசைத்து ஓய்ந்தது மீண்டும் தொடங்கவே , " தாமரை யாரு விடாம கால்  பண்றது.. அடென் பண்ணி பேசு..", என்று சாவித்திரி ஓங்கி குரல் கொடுத்தவராய் அவள் கரத்தில் மின்னிய பெயரில் திகைத்துவிட்டார் .

மான்சியின் பெயர் மிளிர்ந்து இனி நான் ஓய்ந்துவிடுவேன் என்ற கடைசி நொடியில்  , அழைப்பை ஏற்றவுடனே , " உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்க . என் ஷான் வாரிசுக்கு மட்டும் எதாவது ஆச்சு . நான் மனிஷியா  இருக்க மாட்டேன் ‌..", என்று எரிதணலாய் முகம் சிவக்க கத்தியவளிடம் ,

வெகு நிதானமாகவே , " ஏன் இதுக்கு முன்னாடியும் நீங்க மனுஷியா இருந்ததா நினைப்பா . நான் இப்போதேன் க்கா எழுந்திருச்சேன் . அப்புறமா பேசுறேன் . நல்லா சில்லுன்னு எதையாவது குடிச்சிட்டு போய் வேலைய பாருங்க..", என்று படு நக்கலாகவே பதில் கூறியவளாய் அழைப்பை துண்டித்துவிட்டாள் ‌ .

கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய ஆரா , நேராக தன் வகுப்பு அறைக்கு செல்லும் பாதையில் குனிந்த தலை நிமிராதவளாய் ,. என்றும் போல் தோழிகளற்றவளாய்.. இன்றும் தனித்தே நடக்கத் துவங்கி இருந்தாள் ஆராதனா .

அழகிய சிவப்பு நிற டாப்ஸ் மற்றும் லெகின்ஸ் அணிந்தவளாய் , தோளில் தன் புத்தகப் பையை சுமந்து.. நெளிவுகள் அற்ற அடர்ந்த நேர்க் கூந்தலை தன் சிறிய கேட்சோ க்ளிப்பிற்குள் அடக்கியவளாய் ,    குனிந்த தலை நிமிராமல் தன் வகுப்பிற்கு சென்று கொண்டு இருக்க..

அவளுக்கு எதிரே வைத்தக்கண் வாங்க மாறந்தவனாய் நடந்து வந்துக் கொண்டு இருந்த ஆடவனையும் அவள் கண்டுக் கொள்ளவே இல்லை . தன் தோழனுடன் பேசிக் கொண்டே வந்தவனின் விழிகளில் அவள் தென்பட்டு விட , அவனுடைய பேச்சு  முற்றிலும் தடைப்பட்டு விட்டாலும் , கால்களுக்கு விரைவு அதிகரித்து இருந்ததாய் .

" டேய் வாசு . திடீர்னு ஏன்டா மச்சி இப்படி ஓடுற.. உடன்பிறப்பை பார்த்துட்டியா என்ன..", என்று அவன் நண்பனான ப்ரகாஷ் என்னும் ப்ரஸ் குழம்பியவனாகவே அவசரமாக கேட்க ,

அந்த நொடி அவன் விழிக்கு விடுதலை அளித்து நன்கு முறைத்து செய்கை புரிய , ' ரைட்டு..', என்று முழியை உருட்டி நேராக பாதையில் கவனம் செலுத்திய பொழுதிலேயே ஆராதனா எதிரே வருவதை கவனித்தவன்..

" ப்ப்பா.. என்னா கலரூ.. என்னா கண்ணுடா மச்சி..  இவளை பெத்தாங்களா இல்லை செஞ்சாய்ங்களா டா..", என்று வெளிப்படையாகவே ஜொல்லு விட்டவனை ,

" ஒழுங்கா ஓடிப் போயிடு.. இல்லை என்ன பண்ணுவேன்னே எனக்கு தெரியாது ..", என்று கடித்த பற்களுக்கு இடையே துப்ப..

ப்ரகாஷ் சட்டென்று ப்ரேக் போட்டவன் போல் தன் நடையை நிறுத்தி நண்பனை ஏறிட , வாசு அவனைக் கண்டு கொள்ளாமல் முன்னேறிக் கொண்டு இருந்தான் ‌ .

அதில் மேலும் திகைத்து நான்கு எட்டுக்கள் ஓடி வந்தவனாக , "மாப்பிள..",  என்று உலக அதிசியத்தை கண்டவன் போல் அவனை உரசிக் கொண்டே நடக்க..

" வாயமூடிட்டு வா.. நம்மள நம்பி இந்த காலேஜ்ல அவங்களை சேர்த்து இருக்காங்க. நீயே , எதாவது லொள்ளு செஞ்ச.. வேற ஒன்னும் பண்ண மாட்டேன் . உன் மண்டேல நச்சுன்னு ஒன்னு போட்டு.. சின்னதா ஒரு ஆப்ரேஷன் .",  என்று சிரத்தையாக பற்களை காட்டியவாறே கூறிக் கொண்டே சென்றவனை திகிலுடன் , " டேய்.. என்ன டா சொல்ற.. நீ  எப்படா இந்த அளவுக்கு நல்லவனா மாறின..", என்று அலறும் பொழுதே , நண்பனுக்கு பதில் சொல்லாமல் ,

" ஆரா..",  என்று மென்மையாக அழைத்து அவளை தேக்கி இருந்தான் .

மெல்லிய புன்னகையுடன் நின்று இருந்தவனை அடையாளம் கண்டு கொண்டாலும் , இரு கரங்களாலும் , அழுத்தமாக தன் பையை பிடித்தவளாய் , " ஹாய்..", என்று ஆரா உதிர்ப்பதற்கு உள்ளாக , இதயம் வாய் வழியாக எகுறி குத்தித்து வரும் அளவிற்கு தடதடத்தாய் .

அவள் பதற்றத்தை பெரிதும் மறைக்க முயன்றாலும் , சிறகு அடிக்கும் பறவையாய் பலமுறை அவளது இமைகள் படபடத்து , துடிக்கும் இதழ்களுடன் நின்று இருந்தவளை , குறுசிரிப்புடன் , இயல்பிற்கு மாற்ற வேண்டியே  ,

" என்ன பயம்.. அதுவும் எங்கட்ட.. காலேஜ் ஜாயின் ஆகியே ஒன் மன்த் வர போகுது . இன்னுமா , ஃப்ரெண்ட் பிடிக்காம இருக்க..", என்று அவள் பதற்றமான தோற்றத்திற்காக விலக தோன்றாதவனாய் இயல்பாக உரையாடியவனை , நிராகரிக்கவும் இயலாமல் ,

" இல்லை . எனக்கு ஃப்ரெண்ட் இருக்காங்க . அவங்க இன்னைக்கு லீவ் . அதான் தனியா..", என்று பாதியிலேயே நிறுத்திவிட்டாள் .

" ஓ.. க்ளாஸஸ் எப்படி போகுது..",

" ரொம்பவே நல்லா போகுது..", என்று முத்துப் பற்கள் மின்ன பளிச்சென்ற புன்னகையால் இருவருக்கும் பூகம்பத்தை நிகழ்த்தியதை அறியாதவளாய் , நொடிக்குள் சுதாரித்த வாசு ,

" ஆங் .  தாமரை எப்படி இருக்காங்க . ", என்று திசை திருப்ப ,

" ம்.. ரொம்பவே நல்லா இருக்காங்க சீனியர்..", என்று மீண்டும் அதே பிரகாசிக்கும் தோற்றத்தை விருந்தளிக்க ,

" மச்சா.. நான் அப்படியே எஸ் ஆகிக்கிறேன்.. சத்தியமா என்னால சைலென்ட்டா நிக்க முடியும்னு தோணலை..  இங்கேயே நின்னேன்னு வை ப்ரப்போஸ் பண்ணினாலும் பண்ணீடுவேன்..", என்று தீவிர குரலில் கூறியவனாக ப்ரகாஷ் நகர்ந்து இருந்தான் .

" டேய்.. ", என்று பற்களை வாசு கடிப்பதையும் காதில் வாங்காமல் தங்கள் கூட்டத்துடன் கலக்க நகர்ந்துவிட்டான் .

வாசுவிற்கோ , ஆராவின் மீது படிந்த பார்வையை அகற்ற இயலாத போதும் , ரிச்சர்ட் மற்றும் சந்தோஷ் நம்பிக்கை வைத்து கொடுத்த பொறுப்பில் இருந்து தவறக் கூடாது என்பதற்காகவே பார்க்கும் பெண்களை எல்லாம் இதழ் ஓரத்தில் வழியும் நீரையும் பொருட்படுத்தாமல் ஜொல்லு விடுபவன் கட்டுப்பாடுடன் இருந்து நண்பர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து இருந்தான் .


வருத்தப்படாத வலிபிகள் சங்கத்துடன் மூன்று வலிபர்களும் இணைந்து இருக்க.. அங்கு கலந்த ப்ரகாஷிடம் ,

" என்ன ப்ரஸ் கடலை வறுக்கிறது . இங்க வரைக்கும் ஸ்மெல் தூக்கலா இருக்கு..", என்று ஒருத்தி கலாய்க்க..

" அட நீ வேற.. நான் ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்கடான்னு நெஞ்சை கையில பிடிச்சுட்டு பெர்ஃபாமன்ஸ் கொடுத்திட்டு இருக்கான் . நம்ம டிவ்வின்னு‌.. அது தாங்க முடியாம நானே ஓடி வந்துட்டேன்.. ", என்று வடிவேலு போல் கூறி அவனுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் தோழர்கள் முன்னிலையில்  கூற ,

" ப்ரஸ்.. அதுக்காக எல்லாம் அசுருரா  ஆளா அவன் . நேத்து நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து உஷாராகி இருப்பான் .", என்றாள் மற்றவள் .

" சம்பவமா.. எனக்கு தெரியாமலா..", என்றதும் ,

" ம் ... முரட்டு சம்பவம் . நேத்து லீவ்ல இருந்த எந்த பசங்களுக்கும் தெரியாத சூப்பர் சம்பவம்..", என்று அருகே இருந்த தோழியுடன் ஹைஃபை கொடுத்துக் கொண்டவளாக சொல்ல ,

" வாய மூடி பன்னு ( பானுவின் செல்ல பெயர் ) . வாசு வந்தான் நீ காலி.‌,", என்று ப்ரியா எச்சரிக்கை விடுக்க..

" பாருடா பாசமலர் வெர்ஷன் 3..", என்று அவளையும் கிண்டல் செய்தவள் சட்டை செய்யாமல்..

" அவளை விடு ப்ரஸ்..  உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மச்சி.. நம்ம தனுஸ்ரீ இருக்கால்ல‌. நேத்து நம்ம ட்வின்ன வச்ச கண்ணு  வாங்காம பார்த்துட்டே நடந்து வந்தா கையில வேற ரெட் ரோஸ்.. என்னடா நடக்குதுன்னு யோசிச்சுட்டு இருக்கிறதுக்கு முன்னாடியே நம்ம வாசுகிட்ட ,

" வாசுகிட்டையா..", என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவனை முறைத்த ப்ரியவிற்கு  பயந்தவன் ,

" ம் அப்புறம்..", என்று கதை கேட்கும் ஆர்வத்துடன் தூண்டிட ,

" நான் உங்க கூட தனியா பேசணும்னாளா.. ",

" மீ.. ஓ யா..", என்று இல்லாத பில்டப்களுடன் தலைக்கோதியும் சட்டையை சீர் செய்தவனாக அவள் பின்னால் இரண்டு அடி தள்ளி நகர்ந்து நின்றவனிடம் ..

" ஐ லவ் யூ..",

என்று பூவை நீட்டியவளாக சொல்லவும்.. 'அதிர்ச்சில  நாங்க எல்லாரும் எழுந்தே நின்னுட்டோம் ‌..', என்றாள்

" அப்புறம் என்னாச்சு . நம்ம வாசு சொல்லிட்டானா..", என்று மிகுந்த ஆர்வத்துடன் அவள் முன் நின்று இருந்த ப்ரகாஷின் முகம் பார்த்து தன் நட்புக்கூட்டத்தையும் ஒருமுறை பார்த்தவளிடம்,

ப்ரியா , " நீ இப்போ உன் ஷட்டரை க்ளோஸ் பண்ணு . அவன் வந்திட்டு இருக்கான் . ", என்று எச்சரிக்கை செய்ய..

நம்ம பன்னு எங்கே கண்டுக் கொண்டாள் . " எ..எ..ன்..ன..ன..", என்று அவன் தடுமாற ,

" இது போல நீ இந்த பூவை கொடுத்து சொல்லணும்னு சொன்னாளா..",

" வாசு சொல்லீட்டானா..",

" நீ வேற டா . அதோட தனு இன்னோனையும் சேர்த்து சொன்னா..",

" என்ன..",

" அது நீ சைட் அடிக்கிற பொண்ணுங்களுக்கு சீக்கிரமே அவங்க லவ் சக்சஸ் ஆயி கமிட் ஆகுறாங்கலாம் . முரட்டு சிங்கிளையும் கமிட்டெட் பீஸ்ஸா மாத்தும் பவர் உங்கிட்ட இருக்காமே .  நீ ஐ லவ் யூன்னு சொல்லி ரெட் ரோஸ் கொடுத்தா நானு என் லைஃப்ல என் பாய் ஃப்ரெண்ட் கூட செட்டில் ஆயிடுவேன் . ஸோ , எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு.. ", என்று அவள் முடிப்பதற்கு முன்பே வாய்விட்டு சிரித்து இருந்த ப்ரகாஷ் தன் நண்பனும் வந்துவிடவே , மேலும் விழுந்து விழுந்து சிரித்தவனை.. முறைத்தவனாக நின்று இருந்தான் ‌ .

" அப்புறம் என்னாச்சு..", என்று ப்ரகாஷ் கேட்க..

" ம்.. கீழ கிடக்குற கல்லை நம்ம தலை எடுத்திட்டாரு. அவ ஓடியே போய்டா..", என்று விடாமல் அவனை கேலி கிண்டல்கள் செய்து ,  ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு இருந்தவர்களை வாசு அடிக்க துரத்திட..

"  பன்னு.. ஒழுங்கா நில்லு டீ..", என்று வாசு அவளை துவம்சம் செய்யும் நோக்கில் மரத்தை சுற்ற.. ப்ரியாவின் அலைபேசி அலறியது .

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

லேட் எபிஸ்னாலும் எனக்காக தொடர்ந்து படிச்சு ஆதரவு தந்துக் கொண்டு இருக்கும் நட்புகளுக்கு கோடி நன்றிகள் ‌ . வாரத்தில் இரண்டு எபிக்களிவது போட முயற்சிக்கிறேன் . தாமதம் ஏற்பட்டாலும் ,  என் தவறுகளை பொறுத்து மன்னிக்கவும்  வேண்டுகிறேன் .

இப்படிக்கு ,

கனி தேவ் 💕💕💕

Continuă lectura

O să-ți placă și

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
15.2K 634 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
9.9K 361 29
தேவதையின் மௌனமான அழுகை