வா.. வா.. என் அன்பே - 68

1.2K 47 11
                                    

பகுதி - 68

ரிச்சர்ட் குரலில் இருந்த அழுத்தம் சரணை தேக்கி இருக்க.. கவனிக்க துவங்கியவனுக்கு.. புருவ முடிச்சும் யோசனையுமே அதிகரித்ததாய் .
இரவின் நிசப்தத்தின் காரணமோ.. அல்ல ரிச்சர்ட் பேசியதால் விழைந்த எரிச்சலோ.. தாராவின் குரல் , அலைபேசியில் அவன் காதிற்கு மட்டுமல்லாது வெளியேவும் கடந்ததாய்..

" ம்ச்சு.. ரிச்சா.. உனக்கு என்ன தான்டா பிரச்சினை..  அப்பா அம்மா ஓகே சொல்லீட்டாங்க.. எப்ப பண்ணிக்கலாம்னு கேட்குறேன்.. நீ என்னவோ பேசீட்டு இருக்க..", என்று அழுத்தமாக மறுத்தவளாய்.. ‌

" நான் என்னவோ சொல்லைல.. என்னை பற்றி சொல்லணும்னு சொல்றேன்..", என்றான் அதே அழுத்தம் குறையாமல்..

" அதே தான்டா நானும் சொல்லீட்டு இருக்கேன்.. உன்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னதால தான்.. அவங்க, பொண்ணையே கட்டிக் கொடுக்க தயாரா இருக்காங்க.. நீ நேர்ல வந்து சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை..", என்று கோபம் குறையாதவளாய் கத்திக் கொண்டிருந்தவள்... சட்டென்று நிதானித்தவளாய் ,

" ரிச்சா.. நீ எதையும் போட்டு குழப்பிக்காத.. நம்ம கல்யாணத்துக்கு.. அப்புறம் நான் நடிக்க வேண்டாம்னு நீ.. நினைச்சாலும் எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.. உன் வருமானத்தில நிறைவா என்னால குடும்பம் நடத்த முடியும்.. இந்த காசு.. பணம்.. இதெல்லாம் எனக்கும் புதுசுதான்டா.. நான் அதை எல்லாம் பெரிசா நினைக்கவே மாட்டேன்.. எனக்கே உன் பாஸ்ட் வேண்டாம்.. அப்படி இருக்கும் போது.. என் அப்பா , அம்மாக்கு எதுக்கு.. நம்ம லவ் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னு எவ்வளவு சந்தோஷமா சொல்லீட்டு இருக்கேன் . நீ என்னன்னா கொஞ்சமும் ஹேப்பி ஆகாம.. புதுசா ஒன்னை கிளப்பீட்டு இருக்க..", என்று தவிப்போடு பேசியவளுக்கோ ஆதங்கம் மட்டுமே மிதமிஞ்சியதாய் .

அவள் அவனுக்காக பார்க்கும் ஒவ்வொரு தருணங்களிலும்.. உருகி துடிப்பவன்.. இப்பொழுது , அதே நிலையில் இருந்தாலும் , அழுத்தமாக விழிகளை மூடித் திறந்து.. தன் முடிவில் மாற்றம் இல்லாதவனாக , " நேர்ல அவங்களோட பேசினதும்.. என் முடிவை சொல்றேன்..", என்று கூறி அவளை கண் கலங்கச் செய்திருந்தான் .

வா.. வா... என் அன்பே...Donde viven las historias. Descúbrelo ahora