வா.. வா.. என் அன்பே - 64

1.2K 39 21
                                    

அன்புள்ள நண்பர்களே ,

அனைவரும் வணக்கம்...
என் மன சஞ்சலங்களுக்கு மதிப்பளித்து.. பல நாட்களாக காத்திருந்தமைக்கு , கோடி நன்றிகள்..

நானே , எதிர்ப்பார்க்காத அளவிற்கு , பதிவிட தாமதம் ஏற்பட்டுவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்.. மீண்டும் , ஒருமுறை மன்னிப்பு வேண்டுகிறேன்.. இதுவரை , என் நட்புகள் கமெண்ட் பாக்ஸில் குவிந்த.. கருத்துகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை .

அதற்காக , இன்றைய பதிவின் கருத்துக்களை சொல்லாமல் இருக்காதீர்கள்.. மறக்காமல் பதிவிடுமாறு... அன்போடு கேட்டுக் கொள்கிறேன் .

இப்படிக்கு ,
அன்புத் தோழி ,
கனி தேவ்💕💕

பகுதி - 64

டெல்லியில் சேட்டிலைட் சிட்டி என்று அழைக்கப்படும் நொய்டா நகரத்தில் இருக்கும் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றான 332 பி பிளாக்கில் , வீட்டாரின் அனுமதி இன்றியின் சட்டமாக ஒருவன் கால் மேல் கால் போட்டு.. நட்ட நடுஹாலில் தெனாவட்டாய் அமர்ந்திருக்க.. உடன் வந்திருந்தவர்கள் இருவர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.. மற்றொருவனோ , மற்றொரு சோஃபாவில் அமர்ந்திருந்தான் .

ஆனால் , வெள்ளை சட்டைக்காரனிடம் இருந்த திமிர்.. மற்றொருவரிடம் தென்படவில்லை . ஐம்பதுகளில் இருந்த ஆண் பெண் இருவர்.. அவர்கள் அதிரடியாய் காலையிலேயே நுழைந்ததில் பயந்து யார் நீங்கள்.. என்று ஹிந்தியிலும் , ஆங்கிலத்திலுமாய் மாறி.. மாறி கூச்சலிட்டு கொண்டே இருக்க.. வந்தவர்களில் ஒருவனும் கண்டுக் கொள்ளவில்லை .

ஆனால் , அவ்விருவரின் கூச்சலில் கேட்டு படுக்கையில் இருந்து அடித்துப் பிடித்து ஓடி வந்த ஆண் , அவர்களது மகனாய் இருப்பான் போலும் , உறக்கம் பாதியில் கலைந்த நிலையில்.. அவனும் ஆங்கிலத்தில் விசாரித்துக் கொண்டிருக்க.. ம்..ம்ஹும்.. எந்த ஒரு மாறுதல்களும் அடாவடியாய் நுழைந்தவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கவில்லை .

" யாரு நீங்க.. ", என்ற கேள்வியில் துவங்கி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போல் இருப்பதை புரிந்துக் கொண்டதும்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now