வா.. வா‌‌.. என் அன்பே - 18

1.2K 29 5
                                    

பகுதி - 18

தன் அலுவலக அறையில் மிகத் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டவனாக.. சரண் இருந்தான். அடக்கப்பட்ட கோபம்.. எவ்வளவு துணிவு என்ற எண்ணத்தால் விளைந்த அகங்காரம்.. எதிரில் இருந்தால் சுட்டுப் பொசிக்கிடும் வேகம்.. தன்னால் இங்கு இருந்து என்ன செய்து விட முடியும் என்ற அவள் நினைப்பால் பொங்கி எழுந்த ஆத்திரம் என்று.. உள்ளுக்குள் எரிமலையென கொதித்துக் கொண்டிருந்தவனின் கண்களில் தெறித்த ரௌத்திரம்.

எதிரில் இருந்த விக்கிக்கோ.. 'அய்யோ.. இப்ப என்னாச்சுன்னு தெரியலையே.. கோபமா.. கத்தீட்டான்னா கூட பரவால்லை.. அமைதியா இருந்து படுத்துறானே.. யாரு மேல இத்தனை காண்டா இருக்கான்.' என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்க.. சரணின் பார்வையோ.‌. அரைநொடியும் அகலாது.. வெறித்து படியே இருந்த அலைபேசியில் இருந்தது.. மேலும் புருவங்களின் மத்தியில் முடுச்சு விழுந்ததே தவிர காரணம் அறிய முடியவில்லை.

" சரண்.."  என்று அழைக்கவும் முடியாமல்.. தவிப்போடு அமர்ந்திருந்தவனுக்கு.. தப்பாமல் விழுந்தது.. அலட்சியமான அவன் புன்னகை.. அதை பார்த்ததும்.. "போச்சு.. போச்சு.. எதையோ வில்லாங்கமா யோசிக்கிறான்.." என்று கதிகலங்கியிருக்கும் பொழுதே ரிச்சர்டிற்கு அழைத்து.. அவன் இருக்கும் இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் வருமாறு கட்டளையிட்டான் .

" டேய் சரண்.. இப்ப எதுக்காக டா.. இப்படி இருக்க.. என்னாச்சு.. அவனை ஏன் வர சொலற.."
நீ என்னவோ கத்து நான் என் வேலையில் கருத்தாக இருக்கிறேன்.. என்று.. மீண்டும் யாருக்கோ அழைக்க.. அது எடுக்கப்படாமல் போகவை.. ஷிட்.. என்று அருகே இருந்த அழகான பேனா ஸ்டான்ட்.. அதன் உரு தெரியாமல் உடைப்பட்டுக் கிடந்தது.‌. "நான் யாருன்னு உனக்கு காமிக்கிறேன்டீ..",  என்று மெதுவாக கூறினாலும்.. அந்த உறுமலில்.. ஒருநொடி விக்கிகே.. உள்ளுக்குள் குளிர் எடுக்க.. ' இவன் யாரு மேல இவ்வளவு கோபமா இருக்கான்..' என்று சிந்தித்தவனாக.. அமைதி காத்தான் .

தன் ஃபார்மல உடையில், வேக நடையிட்டு உள்ளே அனுமதி கேட்டு நுழைந்த ரிச்சர்ட்டிடம்.. " தாமரை எதுக்காக.. இந்த தொழிலுக்கு வந்தா.." என்ற கேட்ட நொடி , இருவரும் அதிரவே செய்தார்கள்.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now