வா.. வா.. என் அன்பே - 108

1.3K 56 14
                                    

பகுதி - 108

தாமரையின் இதழ்கள் வெளியிட்ட வார்த்தைகளை கேட்ட ஆரவ்விற்கோ , மிதமிஞ்சிய வேதனை ஒருபுறம் என்றால் அளவிற்கு கடந்த கோபமும் அவனது தலையை சூழ்ந்து இருந்ததாய் .

அவன் கைகள் மீன்களை தீண்டி இருக்கவில்லை என்றால் நிச்சயமாக அவளது கன்னத்தை அறைந்து தீண்டி இருப்பான் . அதன் தாக்கம் ஆரவ்வின் விழிகளிலும் படர்ந்து தாமரையை முறைப்பின் மூலமாக வெளிப்படுத்தி கொந்தளித்தவனாக இருந்தவன் , தன் பற்கள் அரைப்பட தாடை இறுகியவனாகவே ,

" உன்னைய.. என் தங்கைன்னு சொன்னதா ஞாபகம்..", என்று அழுத்தம் திருத்தமாக உறுமியதும் ,
இமைகளை உயர்த்தி நிதானமாய் ஏறிட்டவளோ ,

" அப்போ , இந்த எந்த பேச்சும்.. எங்கிட்ட பேசாதீய.. கேட்காதீய.. ", என்று வெகுவான நிதானத்தை கடைப்பிடித்தவளாக கூறி , செய்துக் கொண்டு இருந்த வேலையில் மூழ்கி விட.. ஆரவ்வும் மான்சியுமே திகைத்து விழித்தவாறு இருந்தார்கள் .

எதையும் கண்டுக் கொள்ளாதவளாக சில நிமிடங்களிலேயே , மீன்களை சுத்தம் செய்து முடித்தவள்.. " நீங்க போய் சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்.. என்ன சாப்பிடுறீங்க.. ரைஸா.. இல்லை டிபன் செய்யவா..", என்று அந்த இடத்தை கழுவியவளாகவே விசாரிக்க..

அவன் பதிலை எதிர்ப்பாராமல் இருந்தவளிடம் ,

" தா.. தாமரை.. தா அதை நான் க்ளீன் பண்றேன்.. ரொம்ப குனிந்து ஸ்ட்ரெயின் பண்ணிக்காத.. ", என்று அதுவரை இருவர் செய்துக் கொண்டு இருந்த வேலையை மூக்கை பொத்தியவளாக வேடிக்கை பார்த்த மான்சி , ஆர்வை கடந்து.. பிடிவாதம் பிடித்தவளாக அவளது கரத்தில் வைத்து இருந்த ப்ளாஸ்டிக் துடைப்பத்தை கைப்பற்ற முயல..

" க்கா ப்ளீஸ் அங்குட்டு போறீயளா.. எனக்கு வேலை கெடக்கு.. ஆர்வ் ஸார் அம்மா வரேன்னு வேற சொன்னாக.. முடிஞ்சா உங்க வீட்டுக்காரருக்கு வேண்டியதை செய்ங்க.. போங்க.. ", என்று அவளை தடுத்தவளாக கூறியதுடன் ஆரவ்வையும் முறைத்துக் கொண்டே பேச.. புன்சிரிப்புடன் நின்று இருந்தான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now