வா.. வா... என் அன்பே - 42

1.4K 46 9
                                    

பகுதி - 42

ஆரவ் மிக பெரிய தயாரிப்பாளரின் மகன்.. கல்லூரி படித்த நாட்களிலேயே , மாடலிங் உலகில்.. மிகவும் பிரபலமானவன்.. இருவரும்  அந்த துறையில் இருக்கும் பொழுதே , நெருங்கி நண்பர்களாக இருந்தவர்கள் . மான்சியின் முதல் பட வாய்ப்பு அவர்களுடைய நிறுவனத்தில், ஏற்படக் காரணமானவனும் அவனே.. மான்சியை அவன் விரும்பியிருக்க.. ஆனால் , அவளோ சரணை விரும்பினாள் . இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்த உடனேயே.. படப்பிடிப்பை பற்றி கற்க மேலைநாட்டிற்கு பறந்துவிட்டான் . ஆரவ்‌.. சரண்.. இருவரும் மான்சியின் மீது கொள்ளை பிரியம் வைத்தவர்கள்.. ஆனால்  என்ன.. ஆரவ் , ஆரம்பம் முதலே மான்சியின் தாயை துச்சமாக நினைப்பவன்.. சரணோ , அவளை போன்றே மரியாதைக்குரிய நபராய்.. மதிப்பவனாக இருந்தான் . எக்கணம் , இருவருக்கும் விவாகரத்து என்று கேள்விப்பட்டானோ.. மறுநொடி , அவளோடு துணை நின்றான்.. நிற்கிறான் ..

தாமரைக்கும் , அவனை பற்றி நன்கு அறிவாள்.. மிகவும் நல்லவன்.. ஆனால் , எப்பொழுதும் அவளிடத்தில் வம்பு செய்துக் கொண்டிருப்பவனாகவும். அடாவடியாகவும் இருந்தது.. ஒருபுறமும்.. அவளுக்கு மிகவும் பிடித்தமான மித்ரனுக்கு போட்டியாக , மான்சியிடத்தில் காதலை கூறியதில் இருந்தே.. பிடித்தம் இல்லாதவனாகி போனான்..

இந்த ஐந்தாறு ஆண்டுகளாக , மான்சியின் பாதுகாவலனாக இருப்பவனும் அவன் என்று புரிந்தே இருந்தாலும்.. சரணிற்கு போட்டியாக நினைத்து எப்பொழுதும் மறைக்காமல் அவனிடத்தில் எரிச்சலுடனே நடந்துக் கொள்வாள் ‌. ஆரவ்விற்கு , தாமரை மிகவும் பிடித்தமான சுட்டிப்பெண் என்றால் , தாமரைக்கோ.. பிடிக்கவே.. பிடிக்காத நலவிரும்பி..
தாமரைக்கும் கவனம் முழுவதும் தட்டில் இருந்தாலும் , அவனை பற்றிய நினைப்பிலேயே இருந்தாள்.. அவனைப் பற்றி யோசித்தாலும்.. மிகவும் பிடித்தமாகவே.. அவன் செய்து கொடுத்த பிரியாணியை.. அவனை முறைத்துக் கொண்டே நன்கு சாப்பிட்டாள்.

அவளின் செயலை கண்டவனோ ,
" டேய் சரண்.. உன் பொண்டாட்டி பாப்பான்னாலும்.. பாப்பாதான்டா..", என்று மனதோடு சொல்லிக் கொள்ள.. தன் போல் அந்த நினைப்பில் உதடுகளும் விரிய.. கேலியாக , தன்னை நினைத்தே சிரிக்கிறான் .. என்று கண்டு கொண்டவளாக..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now