வா.. வா.. என் அன்பே - 58

1.2K 48 12
                                    

பகுதி - 58

அறையின் வாயில் நின்று ஒருமுறை.. கீழே பார்க்க நினைத்தவளாக , ஏறி வந்த படிகளை ஏறிட்டு.. மெதுவாக நுழைந்தால்.. சட்டையை அவிழ்த்து விட்டெறிந்தவனாக.. நின்றிருந்தான் ‌.

" ஸா..", என்று தொடங்கியவளுக்கே புத்தியில் உறைக்க பட்டென்று இதழ்களை மூடியவள்.. முதுகை காட்டியவாறு நின்றிருந்தவனை அழைக்கும் வழி தெரியாமல் தடுமாற.. கொலுசின் ஓசையிலேயே , அவளை உணர்ந்துக் கொண்டவனுக்கோ.. அவள் முகம் காணவும் மறுத்தவனாய் குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள.. தாமரையின் நிலையோ , திருவிழாவில் தொலைந்தது போல் நின்றிருந்தாள் ‌. அவன் தன்னை சுத்தம் செய்து வெளி வந்திருந்த பொழுதும் மாற்றம் இல்லாதவளாய் நின்றிருக்க.. லேசாக.. மிகவும் குறைவாக சமன்பட்டிருந்த சினம்.. மீண்டும் கொந்தளிக்க துவங்கவும்.. அவள் முகம் பார்த்தவனாய்.. மௌனமாய் நகர்ந்திருந்தாலும்.. , அவளை கடந்து ஆடியோவை ஆன் செய்ய.. எப்பொழுதும் போல் அந்த அறைக்குள் அவள் குரலே எதிரொளித்திருந்தது..

என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என் உள்ளே
ஏதோ புது மயக்கம்..

என் அன்பே ஒருமுறை
நீ ரசித்தால் என் உள்ளே
ஏதோ புது மயக்கம்..

ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை - விழியில் கோர்த்த உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்..

உன் பார்வை என்னை கொல்ல...
சாய்ந்தேனே நானும் மெல்ல...
நீதான் என் மன்னவா...
நீதான் என் மன்னவா...

வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல...
என் மேலே படுகையில்
பாவம் அழியுதோ...

தேகம் தீண்டும் தூரம் இருந்துமே...
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ...

மழையில் காதல் உன் மடியிலே...
நித்தம் அணைத்துக் கொள்ளிட உயிரிலே...

விழிகள் பேசும் மொழியிலே...
இனி மௌனம் கூட பிழை இல்லை...

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now