வா.. வா.. என் அன்பே - 98

1K 42 15
                                    

ஹாய் நட்புகளே ,

நான் பத்து தடவைக்கு மேல படித்து  எடிட்டி பண்ணினாலே , அவ்வளவு எழுத்துப்பிழை இருக்கும்.. இன்றைக்கோ , தூங்கி விழுந்தே.. செய்தேன்.. ஸோ , தப்பை பொறுத்து.. படித்து கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

இப்படிக்கு ,

உங்கள் கனி தேவ்💞💞💞

❇️❇️❇️❇️❇️❇️

பகுதி - 98

மயூரியும் நேற்று முதல் தாமரையின் சோர்வை கவனித்தவராகவே இருக்கிறார் . ஒருவேளை , சரண் மித்ரன் அவருக்கு அழைக்காமல் இருந்திருந்தால் , மிரட்டியேனும் அவளை வாய் திறக்க செய்திருப்பார் . இப்பொழுதோ , அவளது இந்நிலைக்கு முழு காரணம் மகன் என்பது தெளிவாக புரிந்திருக்க.. என்ன நஞந்தது என்று கேட்கும் தைரியம் அற்றவராக.. அதேசமயத்தில் , தன் மருமகளின் வேதனையை , அதிகரிக்க விரும்பாதவராக.. அமைதியாக வேலையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார் .

நள்ளிரவு நேரத்தில் , டில்லியை சென்று அடைந்து.. தங்கும் இடத்திற்கு வந்த பிறகு.. இருவருக்கும் , தனித்தனி அறையாக பதிவு செய்து இருந்த போதும்,  தாமரையை தனியே விட மனம் இல்லாதவராக.. அவளுடனே தங்கிக் கொண்டார் .

" நீ.. தூங்குடா.. மார்னிங் சீக்கிரமா எழுந்திரிக்கணும்.. ", என்றவராக.. தன் உதவியாளினி கொடுத்திருந்த ரிப்போர்ட்டில் கவனம் பதிக்க.. தாமரையும் , படுத்துவிட்டாள் .

ஒவ்வொரு இரவிலும் தன் மார்பையே மஞ்சாமாக்கி துயில் கொள்பவள்.. எப்பொழுது , அவன் நெஞ்சு அவளுக்கு தலையணையாக மாறக் கூடுமோ.. இருவருக்குமே தெரியாது .  ஆனால் , தாமரைக்கு சரண் மித்ரனின் இதயத் துடிப்பே ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும் தாலாட்டு இசை . அது கிடைக்காமல் , அவன் அறையில்.. அவன் படுக்கையில்.. அவன் வாசத்தில் திருப்தி அடைந்தவளாக அரைகுறையாக நான்கு மாத காலங்களாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு.. இன்று அதுவும் கிடைக்காமல் போனதில்.. கண்கள் எரிந்து உறக்கத்திற்கு கெஞ்சிய போதும்.. தூங்க முடியாது புரண்டவளாகவே இருக்க.. மருமகளின் மீது கவனமாக இருந்த மயூரிக்கு தாளவே முடியவில்லை .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now