வா.. வா.. என் அன்பே - 113

2.3K 60 18
                                    

❤️பகுதி - 113 ❤️

தாமரையின் அதரங்களில் இருந்து வெளி வந்த கேள்வியால் , சுக்கல் சுக்கலாய் சரண் மித்ரன் சிதறிப் போனான் என்றாலும் மிகையில்லை . பல வருடங்களுக்கு பிறகு அவனுக்கு ஏற்பட்டு இருக்கும் மற்றொரு பூகம்பம்.. அதில் , ஏற்பட்ட உறைநிலை என்று அவன் நின்று இருந்தான் .

அன்று , அவளால் ( மான்சியால் ) நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சத்தினால் என்றால் , இன்றோ , அவன் உயிரானவளுக்கு அவனால் கொடுக்கப்பட்ட காயங்களின் உச்சத்தினால் என்பதால் , சிகரமாய் உயர்ந்து நிற்கும் ஆண்மகன் உள்ளுக்குள் வெடித்தே சிதறி இருக்க.. அவன் ஆறுதல் மொழிகளுக்காக , காத்து இருந்து அவன் கண்ணோடு உயிரை கலக்கவிட்டவளாய் எதிர்பார்த்து காத்து இருந்த தாமரைக்கோ , கணவனின் மௌனம் ஏமாற்றத்தை நடவே , கலங்கிய கண்களை அவனுக்கு காண்பிக்க விரும்பாதவளாய் , விரக்தியாக நகர முயற்சிக்க.. மனைவியின் நோக்கம் புரிந்த நொடியில் , பட்டென்று அவள் கரம் பிடித்து தேக்கியவன்.. ஏதோ சொல்ல வாய் திறக்கும் வேளை , அவர்களது அறைக்கதவு தட்டப்படவே , அவனுடைய பேச்சு தடைப்பட்டதாய் , இருவராலும் பேசிக் கொள்ள முடியாது போகவே ,

" கமிங்.. ", என்று அவளுக்கு முன்பாக சென்று கதவை சரண் திறக்க..  வேலையாள் ஒருவர் ராம் ப்ரசாத் கீழே அழைப்பதாக கூறிச் சென்றார் .

" பாப்பா.. வந்து பேசிக்கலாம்.. அப்பா கூப்பிடுறாங்க..", என்று கூறியவனுக்கோ , ' எதையும் போட்டு குழப்பிக்காத டீ.. உடம்புக்கு மறுபடியும் முடியாம வந்திடும்..', என்று கடந்த பத்து நாட்களின் மருத்துவமனை வாசத்தினால் அவளிடம் கூறத் தோன்றினாலும் , அவளது வார்த்தைகள் அவனை கட்டிப் போட்டு வைத்து இருந்தது என்றே சொல்லலாம் .

' எங்கே உன் குழந்தைக்காகவா..',  என்று சொல்லி விடுவளோ என்று அஞ்சியே பாதியோடு தன் பேச்சை முடித்துக் கொண்டான் . 

❤️❤️❤️❤️

ஆரவ்வின் இல்லத்திலோ .. தன் மெத்தையில் , முதுகைக் காட்டியவளாக மான்சி சுருண்டு கிடக்க.. ஆரவ்வோ , விழாவிற்கு கிளம்பும் ஆயத்தத்தில் இருந்தான் .  ஒப்பனையற்ற முகத்திலோ , ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் இருந்தவனின் வெளிர் பச்சை கருவிழிகளோ , பரிதாபமாய் தன் மனைவியை வெறித்தவாறு இருந்தது .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now