வா.. வா.. என் அன்பே - 84

1K 36 6
                                    

பகுதி - 84

சரணின் சீண்டலில் சிவந்தவள்.. அதன் பின் அவன் முகம் காணவும் நாணம் அணைப் போட.. வேடிக்கை பார்க்கும் சாக்கில் திரும்பியவளாக அமர்ந்து கொண்டாள்.. விடாகண்டனோ , தன் பேச்சாலும்.. கம்பீர சிரிப்பினாலும் மேலும் அவளை சிவக்க வைத்திருந்தவாறு வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான்.

எங்கு செல்கிறோம் , எதற்காக.. என்று அவனிடம் கேட்டு அறிந்துக் கொள்ள நினைத்தவை எல்லாம் நினைவிற்கே வராமல் காற்றில் கரைந்த கற்பூரமாக காணாமல் போயிருந்தது அவளுக்கு..

சாரல் காற்றாய் வருடும் அவன் காந்த விழிகள் பேசும் காதல் மொழிகளில் கரைந்து உருகியவளாய் இருந்தவள்.. சாலையில் பார்வையை பதித்தது போல் அமர்ந்திருந்த போதும் தன்னவனின் தோற்றமே மிக நெருக்கமாக இருந்து இம்சிக்க.. சாலையில் இடம் பிடித்திருந்த மாற்றங்களை கவனிக்க தவறியிருந்தாள் .

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு , தான் நடித்து வெளியாக போகும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு.. தென்னக சினிமாத்துறையில் பெருமளவிற்கு இருக்க.. அத்துடன் , இணை நடிகையாக மான்சி.. தயாரிப்பும் அவன் நிர்வாகத்திற்கு கீழ் இயக்கப்பட்டிருக்க.. மக்கள் இடையே யதார்த்தத்தை தாண்டிய ஆர்வத்தை தூண்டியிருந்தது .

பொழுதுபோக்குத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பல சுவாரஸ்யமான தகவல்களை திரட்டும் ஆர்வம் மேலோங்கியவர்களாக தங்களது பணியில் மூழ்கி இருக்க.. மிகப் பெரிய ஈவன்ட் நிறுவனத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டிருந்ததால்  சிறப்பாகவே நிகழ்ச்சிகளை தொகுத்திருந்தார்கள் .

சரண் வருகைக்கு என்று நேரமும் குறித்துக் கொடுத்திருக்க.. வைஷ்ணவ்வின் மேற்பார்வையில் அனைத்தும் நடந்துக் கொண்டிருந்ததது .  மிக மிக முக்கியமான விருந்தினர்களுக்கான வாகன பகுதிக்குள் எதிர்ப்படும் கூட்டத்தை பார்த்தே லேசாக  , விழி உயர்த்தியவனாக , மனைவியை காண.. அவளோ , சென்ற நொடி வரை அவன் அள்ளித் தெளித்து வந்த சாரலில் இருந்து வெளி வராதவளாய் , இமைகள் குடையாக சாய்த்து.. தளிர் மேனியில் சிறு நடுக்கம் விரவியிருக்க , துடிக்கும் இதழ்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் ..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now