வா.. வா.. என் அன்பே - 81

1.4K 42 39
                                    

பகுதி - 81

எப்பொழுதோ , பின் வாயில் வழியாக யுவன் அவ்விடத்தில் இருந்து மறைந்திருந்தான் .

அழகான ஆடம்பரமான திருமண விழா.. பல வெளிநாட்டவர்களின் வருகை , ரிச்சர்ட்டின் மீது பெரும் கவனத்தை ஈர்க்க வைத்திருந்ததாய்.. விருந்தினர்களின் வாழ்த்துக்களும் , ஆசீர்வாதங்களும்.. அவர்களோடு புகைப்படங்கள் என்று மகிழ்ச்சியாக நடந்துக் கொண்டிருக்க.. மற்றொரு , பக்கம்.. இசைக் கலைஞர்களின் பாடல்கள் நடனங்கள்.. இடையிடையே , குட்டீஸ்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என்று கொண்டாட்டமாகவே இருந்தது .

அதில் ப்ரியாவின் குழுவும் இணைந்து.. அனைவரின் கவனத்தையும் இழுக்கும் விதமாக பாடல் ஆடல்.. என்று அமர்க்களம் செய்துக் கொண்டிருந்ததுடன்.. தாமரையையும் , பாடச் சொல்லி இழுத்து விட.. அவளோ , தவிர்க்க பல முயற்சிகள் செய்த போதும் , தோல்வியில் முடிவடைந்ததால்..

" சரி.. நான் பாடணும்னா.. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆடணும்..", என்று மணமக்களை காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள பார்க்க..

" பாப்பா.. அது எப்படி முடியும்.. முகூர்த்த ட்ரஸ்ல இருக்காங்க.. பட்டுப் புடவை வேற‌.. அதுவும் , இப்ப போய்.. ", என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல..

" அப்போ , நான் பாட மாட்டேன்..", என்று பிடிவாதம் பிடித்தவளாய் தாமரை..

" யாருகிட்ட.. ப்ரீயோடவா.. இரு வரேன்..", என்று சிலிர்த்தவளாக.. ப்ரியா.. தாராவை நெருங்கியவள்.. காதில் கிசுகிசுக்க.. அவள் ரிச்சர்ட்டிடம் எதுவோ சொல்ல.. பக்கத்தில் இருந்த விக்கியும் உடன் சேர‌.. என்று எண்ணி பத்தே நிமிடத்திற்குள்.. மணமக்கள் நடனமாட போகிறார்கள்.. தாமரை பாடப் போகிறார்.. என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி அறித்தவள் , அவளது கரத்தில் மைக்கையும் திணிக்க.. இதனை தாமரை எதிர்ப்பார்க்கவே இல்லை .

தன் சகோதரனின் கண்களை சந்தித்தால் , அவனும் நடனத்திற்கு தயாரானது போல் நின்றிருக்க.. அதற்கு மேல் அவளும் தாமதிக்கவில்லை ‌‌ .

வா.. வா... என் அன்பே...Место, где живут истории. Откройте их для себя